15th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024 மார்ச் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் வெளியீடு
- அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 மார்ச் மாதத்தின் (மார்ச், 2023 ஐ விட) வருடாந்தர பணவீக்க விகிதம் 0.53% ஆக உள்ளது (தற்காலிகமானது).
- 2024 மார்ச் மாதத்தில் நேர்மறையான பணவீக்க விகிதம், முதன்மையாக உணவுப் பொருட்கள், மின்சாரம், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகும்.
- மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 2024 மார்ச் மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் 0.40% ஆக இருந்தது.
- 2024 ஜனவரி மாதத்திற்கான இறுதிக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100): 2024 ஜனவரி மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் 'அனைத்து பொருட்களின்' பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 151.2% மற்றும் 0.33% ஆக இருந்தது.
- பல்வேறு பொருட்களின் மொத்த விலைக் குறியீடுகள் மற்றும் பணவீக்க விகிதங்கள் குறித்த விவரங்கள் இணைப்பு 1ல் தரப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் வெவ்வேறு பொருட்கள் குழுக்களுக்கான மொத்த விலைக் குறியீடுகள் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்க விகிதம் இணைப்பு II இல் உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் வெவ்வேறு பொருட்களின் குழுக்களுக்கான மொத்த விலைக் குறியீடு இணைப்பு IIIல் உள்ளது.
- 2024 ஜனவரிக்கான இறுதி எண்ணிக்கை 95.1 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டது. மொத்த விலைக் குறியீட்டெண் குறித்த தற்காலிக புள்ளி விவரங்கள், இறுதி திருத்தக் கொள்கையின்படி திருத்தியமைக்கப்படும்.
- 2023 மார்ச் மாதத்தில் 30.87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பெட்ரோலியம் அல்லாத, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்) இறக்குமதி 2024 மார்ச் மாதத்தில் 35.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2023 மார்ச் மாதத்தில் 36.51 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) பெட்ரோலியம் அல்லாத மற்றும் நவரத்தினங்கள் அல்லாத ஏற்றுமதி 320.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 315.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- பெட்ரோலியம் அல்லாத, நவரத்தினங்கள் அல்லாத நகைகள் (தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்) இறக்குமதி 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 422.80 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 435.54 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- 2023 மார்ச் மாதத்தில் 30.44 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது, 2024 மார்ச் மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 28.54 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
- 2023 மார்ச் மாதத்தில் 16.96 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2024 மார்ச் மாதத்துக்கான சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 15.84 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 325.33 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 339.62 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 182.05 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 177.56 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவை வர்த்தக உபரி 162.05 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 143.28 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான 5-வது கூட்டு ராணுவப் பயிற்சியான டஸ்ட்லிக்கில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவ அணியினர் புறப்பட்டுச் சென்றனர்.
- இந்தப் பயிற்சியை 2024 ஏப்ரல் 28 வரை உஸ்பெகிஸ்தான் குடியரசின் டெர்மெஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டஸ்ட்லிக் பயிற்சி, இந்தியாவிலும் மற்றும் உஸ்பெகிஸ்தானிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்தர நிகழ்வாகும். முந்தையப் பயிற்சி 2023 பிப்ரவரி மாதம் பித்தோராகரில் (இந்தியா) நடத்தப்பட்டது.
- 60 வீரர்களைக் கொண்ட இந்திய அணியில் ராணுவத்தைச் சேர்ந்த 45 வீரர்கள், முக்கியமாக ஜாட் ரெஜிமென்ட்டின் ஒரு பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 15 வீரர்கள் உள்ளனர். உஸ்பெகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த சுமார் 100 வீரர்களைக் கொண்ட அணியினர் பங்கேற்கின்றனர்.
- ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பது, மலைப்பாங்கான மற்றும் அரை நகர்ப்புற நிலப்பரப்பில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்துவது டஸ்ட்லிக் பயிற்சியின் நோக்கமாகும்.
- உயர் அளவிலான உடல் தகுதி, கூட்டுத் திட்டமிடல், கூட்டாக உத்திகள் வகுத்தல் பயிற்சி, சிறப்பு ஆயுத திறன்களின் அடிப்படைகள் ஆகியவற்றிலும் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும்.
- கூட்டுக் கட்டளை மையத்தை உருவாக்குதல், புலனாய்வு மற்றும் கண்காணிப்பு மையத்தை நிறுவுதல், தரையிறங்கும் இடத்தைப் பாதுகாத்தல், சுற்றிவளைத்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், சட்டவிரோத கட்டமைப்புகளைத் தகர்த்தல் போன்றவையும் பயிற்சிகளில் அடங்கும்.