தஞ்சாவூர் விமானப்படை பள்ளியில் வேலைவாய்ப்பு
HANJAVUR AIR FORCE SCHOOL RECRUITMENT 2024
Air Force School Thanjavur Primary teachers (PRTs) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Primary teachers (PRTs) - 3
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்திய அரசு/ யுஜிசி/ ஏஐசிடிஇ-யால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் இளங்கலைக் கல்விப் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது ஜூலை 01 தேதியின்படி 21 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் நிர்வாக இயக்குனர் விமானப்படை பள்ளி தஞ்சாவூர் தஞ்சாவூர் – 613 005 தொலைபேசி:04362 226126 என்ற முகவரிக்கு அனுப்பி 17.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.