இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / ICMR NIRRCH RECRUITMENT 2024
ICMR – NIRRCH நிறுவனத்தில் Upper Division Clerk (UDC) மற்றும் Lower Division Clerk (LDC) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Upper Division Clerk (UDC) மற்றும் Lower Division Clerk (LDC) - 6
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு & டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19900/- முதல் ரூ.81100/- வரை சம்பளமாக வழங்கப்படும்
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (01.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.