Type Here to Get Search Results !

மனித வளர்ச்சி குறியீடு 2022 / HUMAN DEVELOPMENT INDEX 2022

  • மனித வளர்ச்சி குறியீடு 2022 / HUMAN DEVELOPMENT INDEX 2022: ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து கணக்கீடு நடத்தி அறிக்கை வெளியிட்டது.
  • அதில், கடந்த 2021ம் ஆண்டு மொத்தம் உள்ள 191 நாடுகளில் இந்தியாவுக்கு 135வது இடம் கிடைத்தது. 2022ம் ஆண்டில் இந்தியா ஒரு படி முன்னேறி 193 நாடுகளில் 135 வது இடத்துக்கு வந்துள்ளது.
  • உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு 193 நாடுகளில் 134 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு(எச்டிஐ) மதிப்பு 0.633 லிருந்து 0.644 ஆக 2022 ல் அதிகரித்து, நாட்டை நடுத்தர மனித வளர்ச்சி பிரிவில் வைத்துள்ளது. 
  • 2022 ல், இந்தியா அனைத்து எச்டிஐ குறியீடுகளான ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் மொத்த தேசிய வருமானம் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டது. ஆயுட்காலம் 67.2 லிருந்து 67.7 ஆக உயர்ந்தது.
  • பள்ளிப்படிப்பின் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டுகள் 12.6ஐ எட்டியது, பள்ளிப்படிப்பின் சராசரி ஆண்டுகள் 6.57 ஆக அதிகரித்தது. மொத்த தனிநபர் வருமான தொகை 6,542 டாலரில் இருந்து 6,951 டாலர் ஆக உயர்ந்துள்ளது. 
  • கடந்த 2022ல் நாடு முன்னேறியிருந்தாலும், தெற்காசிய அண்டை நாடுகளான வங்கதேசம் (129 வது), பூடான் (125 வது), இலங்கை (78 வது) மற்றும் சீனா (75 வது) போன்றவற்றுக்குப் பின்னால் தான் இன்னும் உள்ளது.
  • சீனா மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது, அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ஐந்து இடங்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது.
  • தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் இந்தியாவில் மிகப்பெரிய பாலின இடைவெளி உள்ளது. பெண்களுக்கும் (28.3%) ஆண்களுக்கும் (76.1%) வித்தியாசம் 47.8% ஆக உள்ளன.

சமத்துவமின்மை அதிகரிப்பு

  • மனித வளர்ச்சி குறியீடு 2022 / HUMAN DEVELOPMENT INDEX 2022: கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளின் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம்(யுஎன்டிபி) அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 
  • அதில், உலகம் முழுவதும் சமத்துவமின்மை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பணக்கார மற்றும் ஏழ்மையான நாடுகளுக்கு இடையிலான இடைவெளி 2020ம் ஆண்டு முதல் விரிவடையத் தொடங்கியது.
  • உலகின் 40 சதவீத வர்த்தகம் மூன்று அல்லது சில குறிப்பிட்ட நாடுகளில் நடக்கிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பங்கு சந்தை மதிப்பு 193 ஐநா உறுப்பு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 90 % அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து முதலிடம்

  • மனித வளர்ச்சி குறியீடு 2022 / HUMAN DEVELOPMENT INDEX 2022: 2022 ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில்,அதிக மனித வளர்ச்சி மதிப்பெண்களைக் கொண்ட 10 நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, ஹாங்காங், டென்மார்க், ஸ்வீடன் முன்னணியில் உள்ளன. ஜெர்மனி மற்றும் அயர்லாந்து 7வது இடத்தில் உள்ளன. 
  • சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து 10வது இடத்தில் உள்ளன. அமெரிக்கா, லக்சம்பர்க்குடன் 20வது இடத்தைப் பிடித்துள்ளது. 
  • மனித வளர்ச்சி குறைந்த நாடுகள் பட்டியலில் சியரா லியோன், பர்கினா பாசோ, ஏமன், புருண்டி, மாலி, சாட், நைஜர், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.

ENGLISH

  • HUMAN DEVELOPMENT INDEX 2022: The United Nations has published a report on the Human Development Index of the world countries. In it, India was ranked 135 out of a total of 191 countries in the year 2021. In 2022, India has moved up a step to rank 135 out of 193 countries.
  • The world's fifth largest economy is ranked 134 out of 193 countries. India's Human Development Index (HDI) value increased from 0.633 to 0.644 in 2022, placing the country in the medium human development category.
  • In 2022, India saw improvement in all HDI indices such as life expectancy, education and gross national income per capita. Life expectancy increased from 67.2 to 67.7.
  • Expected years of schooling reached 12.6, with average years of schooling increasing to 6.57. Total per capita income rose from $6,542 to $6,951. Although the country improved in 2022, it still lags behind South Asian neighbors Bangladesh (129th), Bhutan (125th), Sri Lanka (78th) and China (75th).
  • China has moved up three places, while Sri Lanka has fallen five places due to the economic crisis. Gender discrimination is high in India. India has the largest gender gap in the labor force participation rate. The difference between females (28.3%) and males (76.1%) is 47.8%.

Increasing inequality

  • HUMAN DEVELOPMENT INDEX 2022: The United Nations Development Program (UNDP) has released a report on the situation of various countries in the world after the Corona pandemic. 
  • In it, the report says inequality is rising again around the world. After 20 years, the gap between rich and poor countries has started to widen since 2020.
  • 40 percent of the world's trade takes place in three or a few specific countries. The stock market value of giant tech giants Amazon, Apple, and Microsoft is said to be 90 percent greater than the gross domestic product of the 193 UN member states.

Switzerland is number one

  • HUMAN DEVELOPMENT INDEX 2022: Based on 2022 statistics, Switzerland, Norway, Iceland, Hong Kong, Denmark and Sweden are leading the list of 10 countries with the highest human development scores. 
  • Germany and Ireland are ranked 7th. Singapore, Australia and the Netherlands are at number 10. The United States is tied for 20th with Luxembourg. The list of least developed countries includes Sierra Leone, Burkina Faso, Yemen, Burundi, Mali, Chad, Niger, Central African Republic, South Sudan and Somalia.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel