கமுதி தேவா் கல்லூரியில் ‘குரூப் 4’ தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் பிப்.4- ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், அரசுப் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இங்கு காவலா் தேர்வு, உதவி ஆய்வாளா் தேர்வு, ‘குரூப் 4’, ‘குரூப் 2’, ஆசிரியா் தகுதித் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் பயிற்சி பெற்ற 30- க்கும் மேற்பட்டோா் வெற்றி பெற்றுள்ளனா்.
தற்போது தமிழக அரசு அறிவித்த கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களுக்கான ‘குரூப் 4’ தேர்வுக்காக வருகிற பிப்.4 ஆம் தேதி முதல் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் தங்களது கல்விச் சான்றிதழ் நகல்களை சமா்ப்பித்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.