Type Here to Get Search Results !

மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம் / GREAT NICOBAR BIOSPHERE RESERVE

 

  • மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம் / GREAT NICOBAR BIOSPHERE RESERVE: இக்காப்பகம் 885 ச.கி. மீட்டர் பரப்பளவுடன் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. தற்போது சுமார் 1044 ச.கி. மீட்டரில் பரவியுள்ளது. இக்காப்பகம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ளது. 
  • இக்காப்பகத்தின் முதல் மைய மண்டலம் அலெக்சாண்டர் நதிக்கும் செங்கரப்பா வளைகுடாவுக்கும் இடையே உள்ளது. இரண்டாம் மையமண்டலம் சஹினி மற்றும் ஆன்ட்டி மலைகளுக்கிடையே அமைந்துள்ளது. 
  • ஏற்கனவே உள்ள குடியிருப்புகளைத் தவிர, மைய மண்டலமானது எந்தஒரு பாதிப்புக்குள்ளாகாமல் உள்ளது. மெகாபோடு மற்றும் கொலக்கேலியா (உணவாகும் கூட்டை உருவாக்கும்) போன்ற அழியும் தருவாயிலுள்ள இனங்களுக்கு உறைவிடமாக உள்ளது. ஷாம்ஃபென் பழங்குடியினத்திற்கு உய்விடமாக விளங்குகிறது.

தாவரங்கள்

  • மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம் / GREAT NICOBAR BIOSPHERE RESERVE: வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்டுள்ள இக்காப்பகத்தில் சையாத்தியா, மரப்பெரணி, ஃபேலிநாப்சிஸ் ஆர்க்கிட், ருத்ராட்சம், புன்னை, உப்புப்பாலை, கண்டல், சிலைவாகை, தாழை, மருது மற்றும் சவுக்கு இன தாவரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

விலங்குகள்

  • மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம் / GREAT NICOBAR BIOSPHERE RESERVE: நண்டுத்திண்ணிகுரங்கு, கடலாமை, மலேயாபெட்டி ஆமை, போன்ற இக்காப்பகத்திற்கே உரித்த விலங்கினங்களும் அந்தமான் காட்டுப்பன்றி, பழந்திண்ணி வெளவால், சமுத்திரகழுகு, நிக்கோபார் கிளி மற்றும் உடும்பு போன்ற விலங்கினங்களும் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்

  • மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம் / GREAT NICOBAR BIOSPHERE RESERVE: வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம், 1972ன் பகுதி 65ன் கீழ் உரிமைபெற்ற ஷாம்ஃபென் மற்றும் நிக்கோபாரிஸ் பழங்குடியின மக்கள் இக்காப்பாகத்தை சுற்றி வாழ்ந்து வருகின்றனர். 
  • இவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதாலும் வனப்பொருட்களை சேகரிப்பதாலும்இக்காப்பகம், பெரிதும் பாதிக்கப்படுகிறது. வேட்டையாடுவதால் அந்தமான் காட்டுபன்றியின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 
  • கடல்வெள்ளரி, கொலக்கேலியாவின் கூடு, முதலைகள் மற்றும் ஆமைகள் போன்றவை அதிகமாக சட்டத்திற்கு புறம்பாக ஏறறுமதி செய்யப்படுவதும் அச்சுறுத்தல்களாகும்.

ENGLISH

  • GREAT NICOBAR BIOSPHERE RESERVE: This archive is 885 sq. km. It was declared a Biosphere Reserve in 1989 with an area of 100,000 meters. Currently around 1044 Sq. Spread over meters. The reserve is located on the southern coast of Andaman and Nicobar Islands.
  • The first core zone of the reserve is between Alexander River and Sengarappa Gulf. The second meridian lies between the Sahini and Anti hills.
  • Apart from the existing residences, the central zone remains unaffected. It is a habitat for endangered species such as megapods and colachelia (which form feeding nests). Champhen is home to the tribe.

Plants

  • GREAT NICOBAR BIOSPHERE RESERVE: This tropical rainforest reserve is rich in species of plants such as Saithia, Marrapherani, Phalaenopsis orchid, Rudraksha, Punnai, Salupalai, Kandal, Sillavakai, Thali, Marut and Sauku.

Animals

  • GREAT NICOBAR BIOSPHERE RESERVE: Fauna endemic to this reserve such as crab monkey, turtle, Malayan box turtle, Andaman wild boar, palandinni bat, sea eagle, Nicobar parrot and iguana are also found here.

Threat

  • GREAT NICOBAR BIOSPHERE RESERVE: The Shamphen and Nicobaris tribal people who have rights under Section 65 of the Wildlife Protection Act, 1972 live around the reserve.
  • This reserve is greatly affected by their hunting of wild animals and collection of forest products. The population of Andaman wild boar is decreasing due to poaching. Sea cucumbers, nests of colacella, crocodiles and turtles are also threats due to illegal poaching.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel