Type Here to Get Search Results !

9th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


9th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு
  • ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கடந்தாண்டு காலமான நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை 2025-26 வரை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • மீன்வளத் துறைக்கான உள்கட்டமைப்புத் தேவையை சரி செய்வதற்காக, மத்திய அரசு 2018-19 ஆம் ஆண்டில் ரூ.7522.48 கோடி மொத்த நிதி அளவுடன் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை (எஃப்.ஐ,டி,எஃப்) உருவாக்கியது. 
  • 2018-19 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், 5588.63 கோடி ரூபாய் முதலீட்டில் மொத்தம் 121 மீன்வள உட்கட்டமைப்பு திட்டங்களுக்குப் பல்வேறு மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், பனிக்கட்டி தொழிற்சாலைகள், குளிர்பதனக் கிடங்குகள், ஒருங்கிணைந்த குளிர்பதனத் தொடர், நவீன மீன் அங்காடிகள், சினை மீன் வங்கிகள், குஞ்சு பொரிப்பகங்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாடு, மீன்விதைப் பண்ணைகள், அதிநவீன மீன்வளப் பயிற்சி மையங்கள், மீன் பதனிடும் அலகுகள், மீன் தீவனத் தொழிற்சாலைகள், நீர்த்தேக்கங்களில் கூண்டுகளில் மீன்வளர்ப்பு, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள், நோய் கண்டறியும் ஆய்வகங்கள், போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த அறிவிப்பு உதவிகரமாக இருக்கும்.
  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு), தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி) மற்றும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு சலுகை நிதியை எஃப்.ஐ,டி,எஃப் தொடர்ந்து வழங்கும். தொழில்முனைவோர், தனிநபர் விவசாயிகள் மற்றும் கூட்டுறவுகளின் திட்டங்களுக்கு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் ஏற்கனவே உள்ள கடன் உத்தரவாத நிதியிலிருந்து மத்திய அரசு கடன் உத்தரவாத வசதியை வழங்குகிறது.
பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான அடுத்த நான்கு ஆண்டுகளில் மீன்வளத் துறையை முறைப்படுத்துவதற்கும், மீன்வளக் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் துணைத் திட்டமான "பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா" திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்தத் துணைத் திட்டம், மத்திய துறை துணைத் திட்டமாக, 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதில் 50 சதவீதம், அதாவது 3,000 கோடி ரூபாய் உலக வங்கி மற்றும் ஏ.எஃப்.டி நிதி உட்பட பொது நிதி, மீதமுள்ள 50 சதவீதம், அதாவது 3,000 கோடி ரூபாய் பயனாளிகள் / தனியார் துறையிடமிருந்து எதிர்பார்க்கப்படும் முதலீடாக இருக்கும். 
  • இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை 4 (நான்கு) ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக இந்திய ரயில்வேயில் 6 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் ரூ.12,343 கோடி (தோராயமாக) மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் 6 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • பல கண்காணிப்புத் திட்டங்கள் செயல்பாடுகளை எளிதாக்கும் மற்றும் நெரிசலைக் குறைக்கும். இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டங்கள் உள்ளன. இது பிராந்தியத்தில் உள்ள மக்களை "தன்னிறைவாக" மாற்றும், இது அவர்களின் வேலைவாய்ப்பு / சுய வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.
  • ராஜஸ்தான், அசாம், தெலங்கானா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 18 மாவட்டங்களை உள்ளடக்கிய 6 திட்டங்கள் தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை 1020 கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.
  • இந்தத் திட்டங்கள் பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தின் விளைவாக உருவானவை. இவை ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமாகியுள்ளன. இவை உணவு தானியங்கள், உணவுப் பொருட்கள், உரங்கள், நிலக்கரி, சிமெண்ட், இரும்பு, எஃகு, சாம்பல், கிளிஞ்சல், சுண்ணாம்புக்கல், சரக்குப் பெட்டகம் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதற்கான அத்தியாவசிய வழித்தடங்கள் ஆகும். 
  • திறன் விரிவாக்கப் பணிகளின் விளைவாக ஆண்டுக்கு 87 மில்லியன் டன் அளவுக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்து ஏற்படும். ரயில்வே, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிசக்தித் திறன்மிக்க போக்குவரத்து முறையாகவும் இருப்பதால், நாட்டின் சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைப்பதற்கும், எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் உதவும்.
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க சேமிப்புக் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதற்கு வசதியாக, சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம், பஞ்சாப் & சிந்து வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • 05.02.2024 அன்று பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைமை அலுவலகத்தில், சேமிப்புக் கிடங்கு ஆணையத்தின் தலைவர் திரு டி.கே.மனோஜ் குமார், பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு ஸ்வரூப் குமார் சாஹா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். 
  • இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் & சிந்து வங்கியின் செயல் இயக்குநர்கள் டாக்டர் ராம் ஜாஸ் யாதவ், திரு ரவி மெஹ்ரா, சேமிப்புக் கிடங்கு ஆணையத்தின் துணை இயக்குநர் திரு நவீன் பரோலியா, உதவி இயக்குநர் திரு சாய் பிரதீப் கோபிஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • மின்னணு மாற்றத்தக்க சேமிப்புகிடங்கு ரசீதுகளுக்கு எதிராக நிதி திரட்டுவதற்கான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • இந்தியாவில் வேளாண் பிணைய நிதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர, வைப்புத் தொகையாளர்களுக்கு நன்மைகள் குறித்த தகவல்களை வழங்குவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பஞ்சாப் & சிந்து வங்கி மின்னணு மாற்றத்தக்க சேமிப்புகிடங்கு ரசீதுகளுக்கு ஈடாக எந்தவித அடமானமும் இல்லாமல், கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் கடன்களை வழங்குகிறது. வேளாண் துறையில் ரூ.75 லட்சம் வரையிலும், இதர பிரிவினருக்கு ரூ.5 கோடி வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel