Type Here to Get Search Results !

சேலம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி / TNPSC GROUP 4 EXAM FREE COACHING AT SALEM

சேலம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி / TNPSC GROUP 4 EXAM FREE COACHING AT SALEM

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சாா்பில் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு பிப். 7 முதல் தொடங்குகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேட்டில் ஏற்காடு சாலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பிப். 7 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.

இப்பயிற்சி வகுப்பானது, போட்டித் தேர்வுகளில் ஏற்கெனவே வெற்றி பெற்ற சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. 

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம், சீருடைப் பணியாளா் தேர்வாணையம், மருத்துவப் பணியாளா் தேர்வாணையம் ஆகிய தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு தேர்வுகளுக்கு, இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு 294 போ அரசுப் பணியைப் பெற்றுள்ளனா்.

தற்போது நடத்தப்படும் தொகுதி 4-இல் அடங்கிய பணிகளுக்கான, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வா்கள், இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களைப் பெற்றிட, அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

எனவே, சேலம் மாவட்டத்தைச் சாா்ந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வுக்குத் தயாராகும் தேர்வா்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel