29th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்
- இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் 2024 பிப்ரவரி 29 அன்று புதுதில்லியில் வெளியிட்டார்.
- மாநில வனத்துறையுடன் இணைந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வனவிலங்குகள் நிறுவனம் சிறுத்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது.
- இதன் மூலம் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874- ஆகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 3907 சிறுத்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவில் 1985 சிறுத்தைகளும், கர்நாடகாவில் 1879 சிறுத்தைகளும், தமிழ்நாட்டில் 1070 சிறுத்தைகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
- மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் இன்று காணொலி மூலம் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.
- இது மொரீஷியஸ் மற்றும் அகலேகா இடையேயான சிறந்த போக்குவரத்துக்கான தேவையை நிறைவேற்றுவதாகவும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், சமூக-பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதாகவும் அமையும்.
- மனிதர், விலங்கு, தாவரம், சுற்றுச்சூழல் துறையை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய் தடுப்பு தயார் நிலைக்கான தேசிய ஒற்றைச் சுகாதார இயக்கத்தை முன்னெடுக்க நாக்பூரில் உள்ள தேசிய ஒற்றைச் சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பதவியை விஞ்ஞானி 'எச்' (ஊதிய நிலை-15) நிலையில் உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- தேசிய ஒற்றைச் சுகாதார நிலையத்தின் இயக்குநர் பணியிடத்தை ஊதிய நிலை 15 (ரூ.1,82,000 - ரூ.2,24,100) ஆக விஞ்ஞானி 'எச்' நிலையில் உருவாக்குவதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.35.59 லட்சம் நிதிச் செலவு ஏற்படும்.
- பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- ஒரு கோடி வீடுகளில் கூரை சூரிய தகடு ரூ.75,021 கோடி மதிப்பீட்டில் அமைப்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவதற்கு இந்தத் திட்டத்தை 2024 பிப்ரவரி 13 அன்று பிரதமர் தொடங்கி வைத்தார்.
- ஊரகப் பகுதிகளில் மேற்கூரை சூரிய சக்தியை ஏற்றுக்கொள்வதில் முன்மாதிரியாக செயல்படும் வகையில், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி சூரிய ஒளி கிராமம் உருவாக்கப்படும்.
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களும் தங்கள் பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும் இணைப்பு அமைப்புகளை மேம்படுத்த ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் பயனடைய வேண்டும்.
- இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஆர்வமுள்ள குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்களை உருவாக்குவதற்கும் ஒரு பெரிய பிரச்சாரத்தை அரசு தொடங்கியுள்ளது. திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற குடும்பங்கள் https://pmsuryaghar.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
- ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய திட்டத்தின் கீழ், மூன்று புதிய உரவகைகள் உட்பட பாஸ்பேட், பொட்டாஷியத்திற்கு 2024 காரிஃப் பருவத்திற்கான (01.04.2024 முதல் 30.09.2024 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதற்கான 2024 காரிஃப் பருவத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு சுமார் ரூ.24,420 கோடி ஆகும்.
- பெரிலியம், காட்மியம், கோபால்ட், காலியம், இண்டியம், ரேனியம், செலினியம், டாண்டலம், டெல்லுரியம், டைட்டானியம், டங்ஸ்டன், வனாடியம் ஆகிய 12 முக்கிய, உத்திசார்ந்த கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்துக்கான, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம், 1957-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- கிளாக்கோனைட், பொட்டாஷ், மாலிப்டினம், பிளாட்டினம் ஆகிய 4 முக்கிய கனிமங்களின் ராயல்டி விகிதத்தை 2022 மார்ச் 15 அன்றும், லித்தியம், நையோபியம், பூமியின் அரிய தனிமங்கள் ஆகிய 3 முக்கிய கனிமங்களின் ராயல்டி விகிதத்தை 2023 அக்டோபர் 12 அன்றும் அரசு அறிவித்தது.
- இந்தியாவில் சர்வதேச பெரும்பூனை கூட்டமைப்பை தலைமையகத்துடன் அமைப்பதற்கு 2023-24-ம் ஆண்டு முதல் 2027-28-ம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.150 கோடி மதிப்பிலான ஒருமுறை ஒதுக்கீட்டிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் உள்ளிட்ட பெரிய பூனை இனங்களில் புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, ஆகிய இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.
- மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகமும் (என்எஸ்எஸ்ஓ-கள அலுவலகப் பிரிவு) இஸ்ரோவின் கீழ் உள்ள தேசிய தொலையுணர்வு மையமும் (என்ஆர்எஸ்சி) இணைந்து டிஜிட்டல் முறையில் அதிநவீன ஜியோ ஐசிடி கருவிகள் மற்றும் புவன் தளத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- இந்த ஒப்பந்தத்தில் என்எஸ்எஸ்ஓ-வின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் திரு சுபாஷ் சந்திர மாலிக், என்ஆர்எஸ்சியின் இணை இயக்குநர் டாக்டர் சீனிவாசராவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- நகர்ப்புற புவியியல் பிரிவு கட்டமைப்புகளை நிர்வகிக்க, நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வானது ஐந்தாண்டுகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.
- பெருமளவிலான சமூக பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ள நகர்ப்புறத் துறையில் மாதிரி கட்டமைப்புகளைச் சேகரிப்பதில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் இதில் ஈடுபடுத்தப்படுகிறது.
- முதல் முறையாக 2017-22-ம் ஆண்டில் நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வு டிஜிட்டல் வடிவில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது புவன் தளத்தைப் பயன்படுத்தி 5300-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2022-27-ம் ஆண்டின் தற்போதைய காலகட்டத்தில் 8,134 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.