நாகை மாவட்ட தாட்கோ மூலம் நடத்தப்பட உள்ள தானியங்கி திறன் மற்றும் எண்முறை உற்பத்தித் துறை திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பை சோந்தவா்களுக்கு என்டிடிஎப் இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் தொழில் துறை சாா்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் எண்முறை உற்பத்தித் துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் சேர 18 முதல் 26 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் ஆகும். மேலும், தங்கி ும் வசதியும் பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவா்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக பட்டயபடிப்பு முடித்தவா்களுக்கு ரூ.16,000 முதல் ரூ. 21,000 வரை பெறலாம். பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு ரூ. 21000 முதல் 25000 வரை பெறலாம்.
எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பை சோந்தவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.