Type Here to Get Search Results !

75ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் / 75TH REPUBLIC DAY CELEBRATION

  • 75ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் / 75TH REPUBLIC DAY CELEBRATION: நாடு முழுவதும் இன்று 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் 21 குண்டுகள் முழங்கத் தேசிய கொடியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
  • மேலும் இந்த குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் முப்படை ராணுவ தளபதிகள் உள்ளிட்ட பலர் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார்.
  • இந்த குடியரசு தின விழாவில் முப்படை ராணுவ வீரர்களின் அணிவகுப்புகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் மாநிலங்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றது. 
  • இதில், பழங்கால தமிழ்நாட்டின் தேர்தல் நடைமுறையை விளக்கும் வகையில் 'குடவோலை கண்ட தமிழ்க் குடியே' என்ற பாடலுடன் கம்பீரமாக அலங்கார ஊர்தி சென்றது. இந்த அலங்கார ஊர்தி அங்கிருந்தவர்களை கவர்ந்து ஈர்த்தது.
  • உ.பி., மாநில அலங்கார ஊர்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக த்தை குறிக்கும் வகையில், குழந்தை ராமர் சிலை இடம்பெற்று இருந்தது.
  • மாநிலத்தின் அலங்கார ஊர்தியானது 'அயோத்தியா: விக்சித் பாரத் - சம்ராத் விராசத்' என்ற மையக்கருத்து அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
  • ராஜஸ்தான் மாநிலத்தின் அலங்கார ஊர்தியானது, பெண்கள் கைத்தறி துறையின் வளர்ச்சி மற்றும் மாநிலத்தின் தொன்மைவாய்ந்த கலாசார நிகழ்வுகளை மையப்படுத்தி இருந்தது.
  • குஜராத் மாநிலத்தின் அலங்கார ஊர்தி, குஜராத்தின் சுற்றுலா வளர்ச்சி உலகளாவிய சின்னம் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
  • ம.பி.,யின் அலங்கார ஊர்தியானது, தன்னிறைவு, வளர்ச்சி, பெண்கள் ஆகிய கருத்துகளை மையப்படுத்தி இருந்தது.
  • ஹரியானா மாநில அலங்கார ஊர்தியானது 'என் குடும்பம் என் அடையாளம்' என்ற மையக்கருத்தை வைத்து, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
  • ஒடிசாவின் அலங்கார ஊர்தியில், பெண்களுக்கு அதிகாரமளித்தலில் படைக்கப்பட்ட சாதனை, மாநிலத்தின் கைவினை மற்றும் கைத்தறித்துறை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
  • அருணாச்சல பிரதேசத்தின் அலங்கார ஊர்தியானது, மாநிலத்தின் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இடமான சிங்கங் புகுன் கிராம காப்பகத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.
  • சத்தீஸ்கர் மாநில அரசின் அலங்கார ஊர்தியானது, பழங்குடி சமூகங்களில் உள்ள ஜனநாயக உணர்வு மற்றும் பாரம்பரிய ஜனநாயக மாண்புகளை பிரதிபலிக்கிறது. மேலும், பழங்கால கைவினைப் பொருட்களும் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.
  • மணிப்பூர் மாநில அலங்கார ஊர்தியானது பெண்கள்சக்தியுடன், அம்மாநிலத்தில் 500 ஆண்டுகளாக பெண்களால் நடத்தப்படும் பழமையான சந்தையை காட்சிப்படுத்தியது.
  • லடாக் யூனியன் பிரதேசத்தின் அலங்கார ஊர்தியானது, இந்திய பெண்கள் ஐஸ் ஹாக்கி அணியை மையப்படுத்தி இருந்தது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் அலங்கார ஊர்தி,பழங்குடியின பெண்களின் பட்டுச்சேலைகள் அடிப்படையில் இருந்தது. இவற்றுடன் மஹாராஷ்டிரா, ஆந்திரா, மேகாலயா, தெலுங்கானா மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.

ENGLISH

  • 75TH REPUBLIC DAY CELEBRATION: The 75th Republic Day is being celebrated across the country today. President Draupadi Murmu paid homage by hoisting the national flag with 21 gun salutes in Delhi.
  • French President Emmanuel Macron also attended the Republic Day function. Also, Prime Minister Narendra Modi, Union Ministers and Army Chiefs of the three armed forces attended the Republic Day function.
  • Parades and performances by the soldiers of the tri-services were held on this Republic Day celebration. Also decorated floats were paraded to illustrate the culture of the states.
  • In this, a majestically decorated float accompanied the song 'Kudavolai Kanda Tamilk Gudiye' to explain the election process of ancient Tamil Nadu. This decorative vehicle attracted the audience.
  • UP, the State Ornamental Carriage featured an idol of baby Rama to mark the Ram Temple Kumbabhishekam.
  • The state's ornamental chariot was designed on the theme 'Ayodhya: Vixit Bharat - Samrat Virasat'. The Rajasthan state ornamental chariot focused on the development of the women's handloom industry and the state's ancient cultural events. Decorative vehicle centered on the concepts of self-reliance, development and women, handicrafts were showcased. 
  • Arunachal Pradesh's decorative vehicle was meant to represent Singang Bukhun Village Reserve, a biodiversity hotspot of the state. Chhattisgarh state government's decorative vehicle represented the spirit of democracy and traditional democratic values in the tribal communities. 
  • Also, ancient handicrafts were on display. The Manipur state parade showcased women's power, the oldest market run by women in the state for 500 years. 
  • The Union Territory of Ladakh parade focused on the Indian women's ice hockey team. The Jharkhand parade was based on the silk sarees of tribal women.
  • Andhra, Meghalaya and Telangana states also took part in the parade.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel