Type Here to Get Search Results !

31st JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


31st JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ராம்சர் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த இரு இடங்கள் சேர்ப்பு
  • Ramsar Convention என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, பல்வேறு உயிர்களின் வாழ்விடமாக விளங்கும் தன்மை, அவற்றின் தாங்குநிலை பயன்பாடு தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம். 
  • ராம்சர் அங்கீகாரம் என்பது ஈரநிலங்களுக்கான சாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சர் என்ற நகரத்தில் கையெழுத்தானது. அதன்படி, இந்த அங்கீகாரம் பெறும் இடங்கள் ராம்சர் தளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • 1982 முதல் 2013ஆம் ஆண்டு வரை, ராம்சர் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டன, 2014 முதல் 2022 வரை, 49 புதிய ஈரநிலங்களை ராம்சர் தளங்களின் பட்டியலில் இந்தியா சேர்த்தது. 
  • 2022-ல் மொத்தம் 28 இடங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தியாவில் 75 ராம்சர் தளங்கள் இருந்தன. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 14 ராம்சர் தளங்கள் இருந்தன.
  • இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் காப்பகம் என மேலும் இரு இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாக, தமிழ்நாட்டில் இருந்து 16 இடங்கள், ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • 453.72 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஈரநிலங்களில் ஒன்றாகும். மேலும் இப்பகுதி நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கான குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது. நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் துவரை போன்ற வேளாண் பயிர்களை பயிரிடுவதற்கு கிராம மக்களால் சதுப்பு நில நீர் பயன்படுத்தப்படுகிறது. கரைவெட்டியில் அதிக  எண்ணிக்கையிலான நீர்ப்பறவைகள் உள்ளன. சுமார் 198 வகையான பறவைகளும் இங்கு உள்ளன.
  • லாங்வுட் சோலைக் காப்புக்காடு 'வெப்பமண்டல மழைக்காடாகும்'. தமிழ்நாட்டில்  நீலகிரி மாவட்டத்தில் உள்ள இதன் பரப்பளவு 116.007 ஹெக்டேர் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 26 உள்ளூர் பறவை இனங்களில் 14 பறவை இனங்கள் இந்த ஈரநிலங்களில் காணப்படுகின்றன  .
பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது
  • நித்தி ஆயோக் முன்னாள் தலைவர் திரு அரவிந்த் பனகாரியாவை தலைவராகக் கொண்டு 31.12.2023 அன்று பதினாறாவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் இக்குழுவின் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • 1. திரு. அஜய் நாராயண் ஜா, 15-வது நிதிக்குழு முன்னாள் உறுப்பினர்  மற்றும் செலவினத்துறை முன்னாள் செயலாளர் - முழுநேர உறுப்பினர்
  • 2. திருமதி அன்னி ஜார்ஜ் மேத்யூ, செலவினத்துறை முன்னாள் சிறப்புச் செயலாளர் - முழுநேர உறுப்பினர்
  • 3. டாக்டர் நிரஞ்சன் ரஜதியக்ஷ, நிர்வாக இயக்குநர், அர்தா குளோபல் - முழுநேர உறுப்பினர்
  • 4. டாக்டர் செளமியா காந்தி கோஷ், குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர், பாரத ஸ்டேட் வங்கி - பகுதிநேர உறுப்பினர்
  • குழுவின் பரிந்துரை விதிமுறைகள் 31.12.2023 அன்று அறிவிக்கப்பட்டன. 2026, ஏப்ரல் 1 அன்று தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை 2025 அக்டோபர் 31-க்குள் அளிக்குமாறு 16-வது நிதிக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எட்டு முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி குறியீடு 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது
  • எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி குறியீடு  2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 டிசம்பரில் 3.8 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. 
  • நிலக்கரி, இயற்கை எரிவாயு, எஃகு, உரங்கள், சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட், மின்சாரம் உள்ளிட்ட எட்டு உற்பத்தி துறைகள் 2023 டிசம்பர் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை விகிதத்தை பதிவு செய்துள்ளது.
  • இந்த எட்டு முக்கிய தொழில்துறைகள் மொத்த உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
  • செப்டம்பர் 2023-ம் ஆண்டுக்கான எட்டு முக்கிய தொழில்துறைகளுக்கான  உற்பத்தி குறியீடுகளின் இறுதி செய்யப்பட்ட வளர்ச்சி விகிதம் 9.4 சதவீதமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. 
  • 2023-24-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு - தமிழ்நாடு 2வது இடம்
  • தமிழகத்தில் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சமீபத்தில் தொடங்கி வைத்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வந்தன.
  • இந்த நிலையில் இன்றைய கேலோ இந்தியா போட்டி சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேஇந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
  • இதில், மஹாராஷ்டிரா மாநிலம் தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்துள்ளது.
  • தமிழகம், 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும்;
  • ஹரியானா மாநிலம், 35 தங்கம், 2 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களுடன் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • கடந்த முறை 8 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு ஹரியானாவை பின்னுத்தள்ளி முதன்முறையாக 2 வது இடம் பிடித்துள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel