Type Here to Get Search Results !

28th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


28th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதீஷ் குமார்
  • இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், திடீரென அதில் இருந்து விலகி, மீண்டும் பாஜக உடன் கைகோர்த்தார்.
  • ஞாயிற்றுக்கிழமை காலையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமார், அதைத் தொடர்ந்து பிகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து, பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார். 
  • இந்நிலையில் இன்று (ஜன.28) மாலையில் பிகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டுள்ளார். நிதீஷ் குமாரைத் தொடர்ந்து 8 பேர் மாநில அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி சாதனை
  • உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
  • ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சொந்த தயாரிப்பான சிமோர்க் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஈரான் விண்வெளி நிறுவனம் தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள்கள், தகவல்தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த பயன்பட்டுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் முதல் பெண் சுபேதார் நியமனம்
  • விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜாக், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தில் இணைந்தார்.
  • ஹவில்தார் பிரீத்தி ரஜாக், சுபேதாராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சுபேதார் பதவியை முதன்முறையாக பெண் ஒருவர் வகிப்பது இந்திய ராணுவத்திற்கு பெருமையான தருணமாகும். 
ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலெங்கா சாம்பியன்
  • ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலெங்காவும், சீன வீராங்கனை ஜெங் கின்வெனும் மோதினர்.
  • இதில் சபலெங்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை ஜெங்கை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். இவர் வெல்லும் 2-வது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் இது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel