Type Here to Get Search Results !

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 / INDIAN OIL CORPORATION LIMITED RECRUITMENT 2024

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
INDIAN OIL CORPORATION LIMITED RECRUITMENT 2024

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 / INDIAN OIL CORPORATION LIMITED RECRUITMENT 2024

இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) பல்வேறு தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் (ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT) பணிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்
  • முழு நேர டிப்ளமோ படிப்பை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்பழகுநர் பயிற்சி(Technician Apprentice - Mechanical/Electrical & T&I) , ஐடிஐ கல்வி நிலையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்பிரிவு சார்ந்த பயிற்சி (Trade Apprentice - Assistant Human Resource , Accountant), 12ம் வகுப்பு கல்வி நிலையை அடிப்படையாகக் கொண்ட தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator - Fresher Apprentices - Skill Certificate Holders) ஆகிய மூன்று வகைமையின் கீழ் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இந்த ஆள்சேர்க்கை அறிவிப்பின் மூலம் 473 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 33 காலியிடங்கள் உள்ளன.
  • ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, பயிற்சி காலம், சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆள் சேர்க்கை அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியமான நாட்கள்
  • இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் = 12.01.2024
  • விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் = 01.02.2024
  • எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் = 18.02.2024.
தேர்வு செய்யப்படும் முறை
  • எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி காலம் 
  • ஓராண்டு - அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும்.
வயது வரம்பு
  • இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 12.01.2024 அன்று 18 -24-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். 
  • அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். 
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
  • https://plapps.indianoilpipelines.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel