Type Here to Get Search Results !

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023 / 9TH INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL

  • இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023 / 9TH INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 9-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஃபரிதாபாதில் (ஹரியானா) அமைந்துள்ள உயிரி தொழில்நுட்பத் துறையின் பிராந்திய உயிரி தொழில்நுட்ப மையம் - சுகாதார அறிவியல், தொழில்நுட்ப மாற்ற நிறுவனம் ஆகியவை இந்த மாபெரும் நிகழ்வை நடத்துகின்றன.
  • அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் சாதனைகளைக் கொண்டாடுவதே இந்த அறிவியல் திருவிழாவின் நோக்கமாகும். 
  • அறிவியல் ஆர்வலர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதும், இளம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும், அதை இந்திய மக்களிடையே பரப்புவதும் இந்த விழாவின் நோக்கமாகும். 
  • இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023-ன் மைய கருப்பொருள் "அமிர்த காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு செல்லுதல்" என்பதாகும்.
  • இந்தத் திருவிழாவில் அர்ஜென்டினா, அர்மீனியா, ஆஸ்திரேலியா, கம்போடியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், கென்யா, லாவோ, மலேசியா, மியான்மர், நமீபியா, பிலிப்பைன்ஸ், ருவாண்டா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, வியட்நாம், ஜிம்பாப்வே ஆகிய 22 நாடுகள் பங்கேற்கின்றன.
  • நான்கு நாட்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவில் 2024, ஜனவரி 17 அன்று, பன்னிரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  • முன்னதாக, 2023, டிசம்பர் 16 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இத்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியின் போது அறிவியில் திருவிழாவின் கையேட்டை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். 

ENGLISH

  • 9TH INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL: The Department of Science and Technology, Central Government has organized the 9th India International Science Festival. Regional Biotechnology Center – Institute for Health Sciences, Technology Transformation, Department of Biotechnology located at Faridabad (Haryana) is hosting this grand event.
  • The science festival aims to celebrate India's achievements in the fields of science and technology. The objective of the festival is to recognize the achievements of science enthusiasts, inculcate scientific spirit among young students and spread it among the people of India. The central theme of the International Science Festival of India 2023 is “Bringing Science and Technology to the People in the Amrita Era”.
  • Argentina, Armenia, Australia, Cambodia, France, Germany, Indonesia, Japan, Kenya, Lao, Malaysia, Myanmar, Namibia, Philippines, Rwanda, Singapore, South Africa, Thailand, USA, Vietnam and Zimbabwe are participating in this festival.
  • Twelve programs were held on January 17, 2024, during the four-day festival. Earlier, Union Minister of State for Science and Technology, Dr. Jitendra Singh, released the festival's manual at Virili on December 16, 2023, during a preview program of the festival in New Delhi.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel