1st JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
- டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,64,883 கோடி ரூபாய் ஆக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,443 கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,935 கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் ரூ.84,255 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,534 கோடியும் சேர்த்து), செஸ் வரி மூலம் ரூ.12,249 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,079 கோடியும் சேர்த்து) அடங்கும்.
- 2023 டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்த 2022 டிசம்பர் மாதம் வசூல் ஆன தொகையை விட 10.3 சதவீதம் அதிகம் ஆகும். 7வது முறை 2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை, 7வது முறையாக தாண்டியுள்ளது.
- குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மோதரா சூரியக் கோவிலில் புத்தாண்டையொட்டி காலையில் 4 ஆயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் கலந்து கொண்டார்.
- இந்த சாதனை நிகழ்ச்சி பற்றி பிரதமர் மோடி, குஜராத் 2024 ஆம் ஆண்டை ஒரு குறிப்பிட்ட சாதனையுடன் வரவேற்றுள்ளது. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர்.
- நமக்கு தெரிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு முக்கியமானது. அதில், மோதரா சூரியக் கோயிலும் அடங்கும். இங்கு அனைத்து மக்களும் ஒன்றுகூடி உலக சாதனை படைத்துள்ளனர்.
- இது நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்று. இந்த சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
- இந்தியா, 2024 ஆண்டின் முதல் நாளான இன்று இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைகோள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது.
- கேரளா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட வெசாட் செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது.
- மேலும், வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. செயற்கைகோள் 500-700 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்த பட உள்ளது. விண்வெளியில் உள்ள தூசு, நெபுலா, கருந்துளை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளது.
- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில், இஸ்ரோவின் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.