10th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாகத் தொடரும் - உலக வங்கி கணிப்பு
- உலக வங்கி தனது உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் உள்ள கணிப்பின்படி, உலகின் மிக விரைவான வளர்ச்சி விகிதத்தை இந்தியா தக்கவைக்க உள்ளது.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மாறாமல் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6.5% வரை இருக்கக்கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- முதலீடு ஓரளவு குறைந்துவிட்டது. ஆனால் வருங்காலத்தில் முதலீடுகளின் வளர்ச்சி வலுவாக இருக்கும். இது அதிக பொது முதலீடு மற்றும் வங்கித் துறையின் ஆதரவுன் இந்த வளர்ச்சி நிலையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
- தனிநபர் நுகர்வு வீழ்ச்சி வளர்ச்சியைக் குறைக்கும். தொடர்ச்சியான உணவு விலை பணவீக்கம் செலவினங்களைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.
- குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிடையே இதன் தாக்கம் காணப்படும். இதற்கிடையில், மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப, அரசின் நுகர்வு மெதுவாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்னிட்டு ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை, வெளிநாட்டு முதலீடு உட்பட தனியார் துறையில் வளர்ச்சியைக் குறைக்கக்கூடும் என அறிக்கை எச்சரித்துள்ளது.
- உலக அளவில் இறுக்கமான நிதிக் கொள்கை, நிதி நிலைமையில் உள்ள கட்டுப்பாட்டு மற்றும் பலவீனமான உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் காரணமாக இந்த ஆண்டு வளர்ச்சி 2.4 சதவீதம் பின்தங்கவும் வாய்ப்புள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
- குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது வர்த்தக மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் காந்தி நகரில் நடைபெறுகிறது.
- இதில், 100 நாடுகள் பங்கேற்பதுடன் 33 நாடுகள் பங்குதாரர்களாக இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்கின்றன.
- முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயான், செக் குடியசு நாட்டின் பிரதமர், திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- இந்த மாநாட்டில், முக்கிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, டாடா நிறுவனத் தலைவர், மைக்ரோசாப்ட் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.