தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி 5,446 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிக்கான முதல் நிலை தேர்வு 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நிலையில் முதல் நிலை தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 57,641 நபர்களில் முதன்மைத் தேர்வுக்கு 55,071 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது வரை குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
தற்பொழுது சென்னையில் பெய்த புயல் காரணமக குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடுவதை TNPSC தள்ளி வைத்துள்ளது. தேர்வு முடிவானது ஜனவரி மாதம் 11ஆம் தேதி தேதி வெளியாக உள்ளது.