புத்தாண்டு அல்லது புது வருடம் (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படி புது வருடமானது ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்குகிறது.
புதிய வருடத்தின் தொடக்க நாளை உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது ஆங்கில நாட்காட்டியில் முதல் நாளில் வருகிறது.
இந்த பண்டிகையை ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர். இன்னும் சில நாட்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. எனவே அதனை நாம் சிறந்த முறையில் வரவேற்க வேண்டும்.
இந்த பண்டிகையில் நாம் செய்யும் முக்கியமான செயல்களில் ஒன்று நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதும், வாழ்த்து கவிதைகள் உள்ள புகைப்படங்கள் அகியவற்றை பகிர்வதும் ஆகும்.
முன்பெல்லாம் வாழ்த்துக்களை அஞ்சல் மூலம் அனுப்புவார்கள். ஆனால் தற்போது Whatsapp, Facebook, Instagram போன்ற செயலிகள் மூலம் எளிமையான முறையில் பகிர்கிறோம். ஆனாலும் வாழ்த்து கவிதைகளுடன் அழகிய புகைப்படங்கள் கிடைப்பது சற்று சிரமமாக தான் உள்ளது.
ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். நம்முடைய பக்கத்தில் ஈஸியாக எடுத்து உங்களின் பிரியமான சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பலாம்.
வெற்றிகள் பதியட்டும்
தோல்விகள் தேயட்டும்
புன்னகை பூக்கட்டும்
முயற்சிகள் முளைக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழுங்கள் பிறரையும்
வாழ விடுங்கள்
அன்பை பகிருங்கள்
அது மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கும்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டில்
மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்காக
எனது நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி
நிறைந்ததாக அமைய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
துன்பங்கள் விலக
இன்பங்கள் பெறுக
இந்த புத்தாண்டு
இனிமையாக அமைய
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு தினம் என்பது வெற்று புத்தகத்தின் முதல் பக்கம்: ஒரு அற்புதமான கதையை எழுதுங்கள்!
எதிர்காலம் என்பது உங்கள் வாழ்க்கை கதையை எழுதுவது… அடுத்த ஆண்டை இன்னும் சிறந்ததாக மாற்றுங்கள்.
புத்தாண்டு என்பது வெற்று புத்தகம் போன்றது, பேனா உங்கள் கையில்..
புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2024 உங்களுக்கான ஆண்டு!
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்