- குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 5446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும். குரூப் 8, குரூப் 7 பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகிறது.
- கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில், டிசம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
- தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்ற நிலையில், அதில் தேர்வான 55,071 பட்டதாரிகளுக்களுக்கான முதன்மைத் தேர்வு சென்னை உட்பட தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் அமைக்கபட்ட 186 தேர்வு மையங்களில் கடந்த 25.02.2023 அன்று நடைபெற்றது குறிப்பிடதக்கது.