Type Here to Get Search Results !

9th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

9th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூவர் தேர்வு

  • உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகளைக் கொண்டது உச்ச நீதிமன்றம். எனினும், கடந்த சில மாதங்களாக 3 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன.
  • இதையடுத்து, காலி பணியிடங்களை நிரப்பும் நோக்கில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் புதிய நீதிபதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது.
  • இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சத்திஷ் சந்திர ஷர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ், கவுகாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோரை, உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த 6-ம் தேதி பரிந்துரை செய்தது. 
  • உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை ஏற்கப்பட்டதை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் வெளியிட்டார்.இதையடுத்து, மூவரும் பதவி ஏற்க உள்ளனர். 
  • இவர்கள் பதவி ஏற்ற பிறகு, உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது முழு பலத்தைப் பெறும். இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றம் முழு பலத்துடன் இருந்தது. 
  • அப்போது, காலியாக இருந்த இரண்டு நீதிபதி பணியிடங்கள் நீதிபதிகள் ராஜேஷ் பின்டால், அரவிந்த் குமார் ஆகியோரைக் கொண்டு நிரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 2316 ஏலதாரர்களுக்கு 2.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5180 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு விற்பனை செய்கிறது
  • அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்த, சந்தையில் தலையிட மத்திய அரசின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, கோதுமை, அரிசி ஆகிய இரண்டின் வாராந்திர மின்னணு ஏலங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 
  • 8-ம் தேதி அன்று நடைபெற்ற 20வது மின்-ஏலத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 2.25 லட்சம் மெட்ரிக் டன் அரிசி திறந்த சந்தை விற்பனை திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டது மற்றும் 2.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5180 மெட்ரிக் டன் அரிசி 2316 ஏலதாரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
  • இந்தியா முழுவதிலும் சராசரியாக நியாயமான மற்றும் சராசரி தரம் கொண்ட கோதுமை குவிண்டாலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலை ரூ.2150-ல் இருந்து ரூ.2327.04 என்ற விலையிலும், குறைக்கப்பட்ட விவரக்குறிப்புகளின் கீழான கோதுமையின் சராசரி விற்பனை விலை குவிண்டாலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 2125 என்பதில் இருந்து குவிண்டாலுக்கு ரூ.2243.74 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
  • உள்நாட்டு திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மத்திய பண்டக சாலை, என்.சி.சி.எஃப், நாஃபெட் போன்ற பகுதி அரசு நிறுவனம் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
  • இந்தக் கோதுமை மைதாவாக மாற்றப்பட்டு, 'பாரத் மைதா' என்ற பிராண்டின் கீழ் கிலோவுக்கு ரூ.27.50-க்கு மிகாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வழங்குகின்றன. 7-ம் தேதி வரை, 6051 மெட்ரிக் டன் கோதுமை, மைதாவாக மாற்றுவதற்காக இந்த 3 கூட்டுறவு சங்கங்களால் பெறப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் வணிகர்கள் கோதுமை விற்பனை வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். 7-ம் தேதி வரை நாடு முழுவதும் பரவலாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘பாரத் ஆா்கானிக்ஸ்’: மத்திய அமைச்சா் அமித் ஷா அறிமுகம்
  • இயற்கை வேளாண் விளைப்பொருள்களை விற்பனை செய்ய ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ என்ற வா்த்தகப் பெயரை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.
  • தில்லியில் செயற்கை பூச்சிக்கொல்லிகள், உரங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
  • தேசிய கூட்டுறவு இயற்கை வேளாண் விளைப்பொருள்கள் நிறுவனம் (என்சிஓஎல்) சாா்பாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், மத்திய அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ என்ற வா்த்தகப் பெயரை அறிமுகப்படுத்தினாா்.
  • இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சா்க்கரை, ராஜ்மா, பாசுமதி அரிசி, சோனாமசூரி அரிசி ஆகிய 6 பொருள்கள் விற்பனை செய்யப்படும். 
  • அவை தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான மதா் டைரியின் 150 விற்பனையகங்கள், இணையவழி தளங்களில் விற்கப்படும்.
  • ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ பெயரின் கீழ் விற்பனை செய்யப்படும் பொருள்கள் வருங்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel