Type Here to Get Search Results !

11th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 5.80 சதவீதமாக சரிவு
  • நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த செப்டம்பரில் 5.80 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது. இதுவே இதற்கு முந்தைய மாதமான ஆகஸ்டில் 10.30 சதவீதமாக அதிகரித்திருந்தது.
  • நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.10 சதவீதமாக இருந்தது, நடப்பு நிதியாண்டில் ஆறு சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
  • நாட்டின் தொழில் துறையில் 77 சதவீத பங்களிப்பை வழங்கும் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு செப்டம்பரில் இரண்டு சதவீதமாக இருந்தது, நடப்பாண்டு செப்டம்பரில் 4.50 சதவீதமாக ஏற்றம் கண்டுள்ளது. 
  • மின்சார உற்பத்தி வளர்ச்சி 9.90 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. இதே காலத்தில், மின்சாரத் துறையின் உற்பத்தி, 11.60 சதவீத வளர்ச்சியில் இருந்து, 9.90 சதவீதமாக பின்னடைவைக் கண்டுள்ளது.
  • சுரங்க உற்பத்தி வளர்ச்சியை பொறுத்தவரை, கடந்த ஆண்டு செப்டம்பரில் 5.20 சதவீதமாக குறைந்திருந்த நிலையில் தற்போது 11.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
800 கோடியை கடந்த உலக மக்கள் தொகை
  • உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. 2022 நவம்ரிலேயே உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை குறிப்பிட்டிருந்தது. 
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவி வருகிறது. ஆனால் தொடர்ந்து உலக மக்கள்தொகை உயா்ந்து கொண்டே வருகிறது.
  • 2000ம் ஆண்டு உலக மக்கள் தொகை 600 கோடி. தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது. மக்களின் சராசரி வயது 32ஆக அதிகரித்துள்ளது. 2060-ம் ஆண்டு அது 39-ஆக உயரும். 
  • கனடா போன்ற நாடுகளில் முதியோா்களின் இறப்பு விகிதம வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது.
  • பெண்கள் இயற்கை முறையில் கருத்தரிப்பது தொடா்ச்சியாக குறைந்து வருவதால் கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான கூறப்பட்டுள்ளது. 
  • இந்த செய்திக்குறிப்பின் படி அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி டோக்கியோவின் மக்கள் தொகை 3,71,94,105 ஆக உள்ளது. 
  • பட்டியலில் டெல்லி 3,29,41,309 மக்கள் தொகையுடன் 2ம் இடத்திலும், சீனாவின் ஷாங்காய் 2,92,10,808 மக்களுடன் 3ம் இடத்திலும் உள்ளன. 2,12,96,517 மக்களுடன் மும்பை 9வது இடத்திலும், 1,53,32,793 மக்களுடன் கொல்கத்தா 17வது இடத்திலும், 1,36,07,800 மக்களுடன் பெங்களூரு 23வது இடத்திலும், 1,17,76,147 மக்களுடன் சென்னை 26வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel