Type Here to Get Search Results !

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை / TAMILNADU BC, MBC SCHOLARSHIP 2023

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை / TAMILNADU BC, MBC SCHOLARSHIP 2023

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மேலும், நடப்பாண்டில் உதவித்தொகை புதுப்பிக்கும் மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் ஸ்டூடண்ட் லாக்இன் சென்று ஆதார் எண் அளித்து இ கீ வெரிபிகிசேன் செய்ய வேண்டும்.

இதில், ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும்.

இக்கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் வருகிற 18ந்தேதி முதல் செயல்படும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு, மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel