9th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தனி தீர்மானம்
- காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
- காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக அரசு எப்போது உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.
- முதல்வர் கொண்டுவந்த காவிரி தொடர்பான தீர்மானம் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- சி.ஜி.ஐ.ஏ.ஆர் அமைப்பின் பாலின சம விளைவுகளுக்கான சான்று மற்றும் புதிய வழிகளை உருவாக்கும் (ஜெண்டர்) தாக்க மேடை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) நடத்தும் 'வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை: நியாயமான மற்றும் நெகிழ்வான வேளாண் உணவு முறைகளை நோக்கி' என்ற சர்வதேச ஆய்வு மாநாட்டைத் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- கிழக்கு ஆப்ரிக்க நாடான டான்சானியாவின் அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன், நான்கு நாட்கள் பயணமாக புதுடில்லி வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து, இரு தரப்பு உறவுகள் குறித்து, அவருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல இரு தலைவர்களும் முன்வந்துள்ளனர்.
- டிஜிட்டல் பரிவர்த்தனை, கலாசாரம், விளையாட்டு, உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தவிர, ராணுவத் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
- வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் இரு நாடுகளும் முக்கிய பங்காளிகளாக உள்ளன. இதையடுத்து, பரஸ்பரம் அந்தந்த நாடுகளின் கரன்சியில் வர்த்தகம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.