Type Here to Get Search Results !

2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2023

2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2023
  • 2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2023: ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாடமி வெளியிட்ட அறிவிப்பில், 2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு, 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த மௌங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குவாண்டம் புள்ளிகள் நானோ தொழில்நுட்பத்தின் டூல் பெட்டியின் முக்கிய பகுதியாக உள்ளன. வேதியியலில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் அனைவரும் நானோ உலகத்தை ஆராய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
  • குவாண்டம் புள்ளிகள் தற்போது QLED தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கணினி திரைகள் மற்றும் தொலைக்காட்சித் திரைகளை ஒளிரச் செய்கின்றன. மேலும் உயிரி வேதியியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உயிரியல் திசுக்களை வரைபடமாக்க இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
  • குவாண்டம் புள்ளிகள் மனித குலத்திற்கு மிகப் பெரிய பயனைத் தருகின்றன. எதிர்காலத்தில் அவை நெகிழ்வான எலக்ட்ரானிக்ஸ், சிறிய சென்சார்கள், மெல்லிய சூரிய மின்கலங்கள் மற்றும் தகவல் தொடர்புக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே இந்த சிறிய துகள்களின் திறனை நாங்கள் ஆராயத் தொடங்கினோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
  • நோபல் பரிசு பெறுபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.32 கோடி), சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும். இந்தப் பரிசுத் தொகை மேற்கண்ட 3 விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

ENGLISH

  • NOBEL PRIZE FOR CHEMISTRY 2023: The Royal Swedish Academy of Sciences in Stockholm, Sweden announced that the 2023 Nobel Prize in Chemistry will be awarded to 3 chemical scientists.
  • Three scientists, Maungi Pavendi from America, Louis Bruce and Alexey Ekimov from Russia, have been selected to receive the Nobel Prize in Chemistry. 3 Nobel Prizes have been announced for the discovery and synthesis of quantum dots.
  • Quantum dots are an important part of the toolbox of nanotechnology. The 2023 Nobel Laureates in Chemistry have all been pioneers in exploring the nanoworld.
  • Quantum dots currently illuminate computer screens and television screens based on QLED technology. And biochemists and doctors use them to map biological tissues.
  • Quantum dots are of great benefit to mankind. Researchers believe they could contribute to flexible electronics, small sensors, thin solar cells and communications in the future. So we set out to explore the potential of these tiny particles, say scientists.
  • Nobel laureates will be awarded one million US dollars (roughly Rs. 8.32 crore), a certificate and a gold medal. The prize money will be distributed equally among the above 3 scientists.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel