Type Here to Get Search Results !

நோபல் பரிசு 2023 / NOBEL PRIZE 2023

நோபல் பரிசு 2023 / NOBEL PRIZE 2023

NOBEL PRIZE

  • நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. 
  • நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கப்பரிசு அடங்கியது. 

2023-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSIOLOGY OR MEDICINE 2023

NOBEL PRIZE FOR PHYSIOLOGY OR MEDICINE 2023

  • 2023-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSIOLOGY OR MEDICINE 2023: 1901 முதல் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசானது, இதுவரை உடலியல் அல்லது மருத்துவத்துக்காக 113 முறை வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 12 பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 
  • TO KNOW MORE ABOUT - BINGO CASH PROMO CODE
  • 32 வயதில் இன்சுலின் கண்டுபிடித்ததற்காக 1923-ம் ஆண்டு மருத்துவப் பரிசைப் பெற்ற ஃபிரடெரிக் ஜி. பான்டிங் தான் இதுவரை நோபல் பரிசு வென்ற இளைய மருத்துவப் பரிசு பெற்றவராவார். நோபல் பரிசு அறிவிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் வழங்கப்படுகிறது.
  • கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் உள்ள 50 பேராசிரியர்களைக் கொண்ட நோபல் குழுவினரால், மருத்துவத்துறையில் உருவாக்கிய பெரிய கண்டுபிடிப்புகளுக்காக மதிப்புமிக்க நோபல் விருது வழங்கப்பட்டது.
  • இன்று வழங்கப்பட்ட 2023-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பயனுள்ள mRNA தடுப்பூசிகளை உருவாக்க உதவும் நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக, கட்டாலின் கரிகோ (Katalin Kariko) மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman) ஆகிய இரண்டு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • உலகம் முழுவதும் மனித உயிர்களை கொத்துகொத்தாக பலிகொண்ட கோவிட் தொற்றானது, மருத்துவம் தொழில்நுட்பம் முன்னேறிய நவீன காலத்திலேயே 4 பக்க சுவர்களுக்குள் உலகத்தை முடக்கிப்போட்டது. 
  • தன் நாட்டு மக்களின் உயிர்கள் கண்முன்னே பறிபோனதை பார்த்து பல நாட்டு பிரதமர்கள் பொதுவெளியில் கண்ணீர் சிந்தினர். பெற்ற குழந்தைகளைகூட பெற்றோர்களால் தொடமுடியாத நிலைமை ஏற்பட்டது. 
  • இறந்த சொந்தங்களை வீட்டுக்கு எடுத்துவர முடியாத அவலநிலை உலகம் முழுவதும் ஏற்பட்டது. இத்தகைய கடினமான சூழலில் கோவிட்-19க்கான தடுப்பூசிகள் என்பது மனித குலத்தையே காக்கும் ஒன்றாகவே எல்லோராலும் பார்க்கப்பட்டது. அப்படி மனித உயிர்களை காப்பதற்காக பாடுபட்ட இரண்டு மருத்துவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • கட்டாலின் கரிகோ (Katalin Kariko) மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman) ஆகிய இரண்டு மருத்துவர்களையும் புகழ்ந்து பாராட்டிய நோபல் பேரவை, "நமது நோய் எதிர்ப்பு சக்தியுடன் mRNA எவ்வாறு தொடர்பு கொண்டு பெருந்தொற்றுக்கு எதிராக போராடியது என்பதை நாம் எல்லோரும் கண்கூடாக பார்த்தோம். 
  • நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவான கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்கான தடுப்பூசி வளர்ச்சியின் முன்னோடியாக பங்களித்ததற்கு இந்த விருது வழங்கப்படுகிறது" என்று நோபல் பேரவை புகழ்ந்து கூறியது.

கட்டாலின் கரிகோ

  • 2023-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSIOLOGY OR MEDICINE 2023: Szolnok எனப்படும் இயற்கை அதிசயங்கள் நிறைந்த பெரிய ஹங்கேரிய சமவெளி பகுதியில் 1955-ல் பிறந்த கட்டாலின் கரிகோ, Szeged பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் Perelman School of Medicine-ல் துணைப் பேராசிரியராகவும் உள்ளார்.

ட்ரூ வெய்ஸ்மேன்

  • 2023-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSIOLOGY OR MEDICINE 2023: ட்ரூ வெய்ஸ்மேன் தடுப்பூசி ஆராய்ச்சியில் ராபர்ட்ஸ் குடும்பப் பேராசிரியராகவும், ஆர்என்ஏ கண்டுபிடிப்புகளுக்கான பென் இன்ஸ்டிட்யூட் இயக்குநராகவும் உள்ளார்.

ENGLISH

  • NOBEL PRIZE FOR PHYSIOLOGY OR MEDICINE 2023: The Nobel Prize, which has been awarded since 1901, has been awarded 113 times for physiology or medicine. A total of 12 women have been awarded the Nobel Prize. 
  • Frederick G. was awarded the 1923 Medicine Prize for the discovery of insulin at the age of 32. Ponting is the youngest medical laureate ever to win a Nobel Prize. Nobel Prize announcements are made every year in October.
  • The Nobel Committee of 50 professors at the Karolinska Institute awarded the prestigious Nobel Prize for major discoveries in medicine.
  • The 2023 Nobel Prize in Physiology or Medicine, awarded today, was awarded to two doctors, Katalin Kariko and Drew Weissman, for their discoveries regarding nucleoside base changes that will help develop mRNA vaccines effective against Covid-19 infection.
  • The covid epidemic that claimed human lives all over the world paralyzed the world within the 4 sided walls even in the modern era of advanced medical technology. Prime Ministers of many countries shed tears in public as they saw the loss of their countrymen's lives in front of their eyes. 
  • There was a situation where parents could not even touch their children. The plight of not being able to bring dead loved ones home has arisen all over the world. 
  • In such a difficult environment, vaccines for Covid-19 were seen by everyone as a way to save humanity. Two doctors have been awarded the Nobel Prize for saving human lives.
  • Praising the two doctors, Katalin Kariko and Drew Weissman, the Nobel Council said, "We have all witnessed firsthand how mRNA interacts with our immune system to fight against pandemics. 
  • The fight against Covid-19, which has emerged as the greatest threat to human health in modern times "This award is given for pioneering contributions to vaccine development," the Nobel Council praised.

Katalin Karigo

  • NOBEL PRIZE FOR PHYSIOLOGY OR MEDICINE 2023: Katalin Kariko, born in 1955 in Szolnok, a great Hungarian plain full of natural wonders, is a professor at the University of Szeged and an adjunct professor at the Perelman School of Medicine at the University of Pennsylvania.

Drew Weisman

  • NOBEL PRIZE FOR PHYSIOLOGY OR MEDICINE 2023: Drew Weisman is the Roberts Family Professor in Vaccine Research and director of the Penn Institute for RNA Discovery.
2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSICS 2023

2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSICS 2023

  • 2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSICS 2023: ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 
  • அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
  • அந்த வகையில் நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று, நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதில், நடப்பு ஆண்டில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பியரி அகோஸ்டினி, பெரென்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய 3 பேருக்கு நடப்பு ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எலக்ட்ரான் மற்றும் ஆற்றலை விரைவாக செயல்முறைப்படுத்தும் அளவீடுகளை பயன்படுத்துவதற்கான கருவிகளை கண்டறிந்ததால் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 
  • அணுக்களில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்காக புதிய கருவியை இவர்கள் 3 பேரும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • அணுக்களில் மூலக்கூறுகளுக்கு இடையே இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதன் மூலம் புதுவிதமான ஒரு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். 
  • இது அறிவியல் உலகத்திற்கும், வருங்கால தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குவாண்டம் மெக்கானிக் என்பது போன்ற விஷயங்களுக்கு இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கருவியில் இவர்கள் 3 பேரின் பங்களிப்பும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • குறிப்பாக எலக்ட்ரான்களுக்கு இடையில் ஏற்படும் திசைவேக மாற்றம் மற்றும் ஆட்டோசெகண்ட் எனப்படுகின்ற ஹார்ட்பீட் மற்றும் ஏஜ் ஆப் யுனிவர்ஸ் போன்றவற்றை இதன் மூலம் கண்டறிய முடியும். 
  • அதாவது பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு அணுவில் உள்ள மாற்றங்களையும் இந்த கருவியின் மூலம் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இது விண்வெளி துறையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
  • 2022ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அலெய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் பெரிய தூரத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்பதற்கான வழியைக் கண்டறிந்ததற்காக மூன்று பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

ENGLISH

  • NOBEL PRIZE FOR PHYSICS 2023: Nobel Prize is awarded every year. The Nobel Prize is awarded annually to those who achieve achievements in 6 fields: medicine, physics, chemistry, economics, peace and literature. The Nobel Peace Prize is announced in Norway and all other Nobel Prizes are announced in Stockholm, the capital of Sweden.
  • The Nobel Prize for Medicine was announced yesterday. Today, the Nobel Prize in Physics for the current year has been announced. In this, the Nobel Prize in Physics is distributed to 3 people who have achieved in the field of physics in the current year. 
  • The Nobel Prize in Physics for the current year has been announced for 3 people from America, Germany and Sweden namely Pierre Agostini, Berenk Krause and Anne Houllier.
  • It is said to be given by the discovery of tools for using measurements that process electrons and energy rapidly. It is said that the 3 of them have invented a new instrument to study the molecules and electrons in atoms.
  • A new kind of research can be done by studying the intermolecular electrons in atoms. It will be important to the world of science and future technology. It is also said to be useful for things like quantum mechanics. It has been reported that 3 of them have contributed to this tool.
  • In particular, the change in velocity between electrons and the heartbeat known as the autosecond and the age of the universe can be detected through it. This means that changes in every atom in the barium can be detected with this instrument. Hence it is said to be important in space industry as well.
  • The 2022 Nobel Prize in Physics has been awarded to Alain Aspect of France, John F. Glaser of the United States and Anton Seilinger of Austria. All three are credited for finding a way that invisible particles called photons, even when separated by large distances, can be connected to each other.
2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2023

2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2023

  • 2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2023: ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாடமி வெளியிட்ட அறிவிப்பில், 2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு, 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த மௌங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குவாண்டம் புள்ளிகள் நானோ தொழில்நுட்பத்தின் டூல் பெட்டியின் முக்கிய பகுதியாக உள்ளன. வேதியியலில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் அனைவரும் நானோ உலகத்தை ஆராய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
  • குவாண்டம் புள்ளிகள் தற்போது QLED தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கணினி திரைகள் மற்றும் தொலைக்காட்சித் திரைகளை ஒளிரச் செய்கின்றன. மேலும் உயிரி வேதியியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உயிரியல் திசுக்களை வரைபடமாக்க இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
  • குவாண்டம் புள்ளிகள் மனித குலத்திற்கு மிகப் பெரிய பயனைத் தருகின்றன. எதிர்காலத்தில் அவை நெகிழ்வான எலக்ட்ரானிக்ஸ், சிறிய சென்சார்கள், மெல்லிய சூரிய மின்கலங்கள் மற்றும் தகவல் தொடர்புக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே இந்த சிறிய துகள்களின் திறனை நாங்கள் ஆராயத் தொடங்கினோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
  • நோபல் பரிசு பெறுபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.32 கோடி), சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும். இந்தப் பரிசுத் தொகை மேற்கண்ட 3 விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

ENGLISH

  • NOBEL PRIZE FOR CHEMISTRY 2023: The Royal Swedish Academy of Sciences in Stockholm, Sweden announced that the 2023 Nobel Prize in Chemistry will be awarded to 3 chemical scientists.
  • Three scientists, Maungi Pavendi from America, Louis Bruce and Alexey Ekimov from Russia, have been selected to receive the Nobel Prize in Chemistry. 3 Nobel Prizes have been announced for the discovery and synthesis of quantum dots.
  • Quantum dots are an important part of the toolbox of nanotechnology. The 2023 Nobel Laureates in Chemistry have all been pioneers in exploring the nanoworld.
  • Quantum dots currently illuminate computer screens and television screens based on QLED technology. And biochemists and doctors use them to map biological tissues.
  • Quantum dots are of great benefit to mankind. Researchers believe they could contribute to flexible electronics, small sensors, thin solar cells and communications in the future. So we set out to explore the potential of these tiny particles, say scientists.
  • Nobel laureates will be awarded one million US dollars (roughly Rs. 8.32 crore), a certificate and a gold medal. The prize money will be distributed equally among the above 3 scientists.

2023ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR LITERATURE 2023

  • 2023ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR LITERATURE 2023: நோபல் பரிசு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அகாடமியால் வழங்கப்படுகிறது. 1895 இல் ஆல்பிரட் நோபலின் விருப்பப்படி நிறுவப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.
  • குரலற்றவர்களின் குரலாக உள்ள அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைக்காக இந்த நோபல் பரிசு அவருக்குக் கொடுக்கப்படுகிறது என ஸ்வீடிஸ் அகாடமி கூறியுள்ளது.
  • "நோர்வேஜியன் நைனார்ஸ்க் மொழியில் எழுதும் இவர் நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் என பல வகையான மகத்தான படைப்புகளைத் தந்திருக்கிறார். 
  • இன்று உலகில் மிகவும் பரவலாக அறியப்படும் நாடக ஆசிரியர்களில் ஒருவராக இருக்கும் இவர், தனது உரைநடைக்காகவும் பெரும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்" என நோபல் பரிசு அறிக்கை கூறுகிறது.
  • 64 வயதாகும் ஜான் ஃபோஸ் எழுதிய முதல் நாவலான 'சிவப்பு, கருப்பு' (Raudt, svart) 1983ஆம் ஆண்டு வெளியானது. உணர்ச்சிபூர்வமான அந்த நாவல் தற்கொலையை கருப்பொருளாகக் கொண்டது. பல வழிகளில், அவரது பிற்கால படைப்புகளுக்கு முன்னோடியாக அமைந்தது எனவும் நோபல் பரிசு அறிக்கை கூறியது.
  • புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஹென்றிக் இப்சனுக்குப் பிறகு நார்வே நாட்டில் அதிக முறை அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் இவருடையவை. 2022ஆம் ஆண்டில் இவரது A New Name: Septology VI-VII என்ற நாவல் புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. சொந்தப் படைப்புகள் மட்டுமின்றி, 2011ஆம் ஆண்டில் பைபிளையும் தனது நார்வே பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.

ENGLISH

  • NOBEL PRIZE FOR LITERATURE 2023: The Nobel Prize is awarded by the Swedish Academy in Stockholm, Sweden. It is one of the five Nobel Prizes established in 1895 by the will of Alfred Nobel.
  • The Swedish Academy said the Nobel Prize is being awarded to him for his innovative plays and prose as a voice for the voiceless.
  • "Writing in the Norwegian Nynorsk language, he has produced a large body of work, including plays, novels, poetry collections, essays, children's books, and translations.
  • "One of the most widely known playwrights in the world today, he is also widely recognized for his prose," the Nobel Prize statement said.
  • Raudt, svart, the first novel written by 64-year-old John Fosse, was published in 1983. The emotional novel deals with the theme of suicide. In many ways, the Nobel Prize was said to be a precursor to his later work.
  • His plays are the most performed in Norway after the famous playwright Henrik Ibsen. In 2022, his novel A New Name: Septology VI-VII was shortlisted for the Man Booker Prize. In addition to his own works, he also translated and published the Bible in his Norwegian language in 2011.
2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PEACE 2023

2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PEACE 2023

  • 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PEACE 2023: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் கலை மற்றும் அறிவியலில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.
  • அதன்படி, கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
  • இதையடுத்து, இயற்பியலுக்கு மூன்று பேர் நோபல் பரிசு பெற்றனர். அதேபோல் வேதியலில் , குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக பணிபுரிந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவா ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
  • இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் பொஸ்ஸே என்பவருக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிம் ஈரான் நாடிட்ல் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமததிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

  • NOBEL PRIZE FOR PEACE 2023: The Nobel Prize, named after Alfred Nobel of Sweden, is awarded annually to outstanding achievements in the arts and sciences. At this stage, the Nobel Prize for the year 2023 is being announced.
  • Accordingly, the Nobel Prize was announced to both Kathleen Carrico and Drew Wiseman from America, who played an important role in the corona vaccine.
  • Subsequently, three people won the Nobel Prize for Physics. Similarly, in chemistry, Maungi Pawendi, Louise Bruce and Alexi Ekimova, who worked for research related to quantum dots, received the Nobel Prize in Chemistry.
  • In this situation, the Nobel Prize for Literature for the year 2023 has been announced yesterday to Jon Posse from Norway.
  • In this context, the Nobel Peace Prize for the year 2023 has been announced today. Accordingly, Nargis Mohammadi, who fought against the oppression of Iranian women and went to jail several times, has been notified. He is currently in jail.
2023ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR ECONOMICS 2023

2023ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR ECONOMICS 2023

  • 2023ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR ECONOMICS 2023: உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது.
  • அதாவது, ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • அந்த வகையில் கடந்த 2-ஆம் தேதி முதல் மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்பட்டன. 
  • தொடர்ந்து இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் அக். 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • அந்த வகையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ள செய்தியில், '2023 ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு, பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார அறிஞர் கிளாடியா கோல்டின் தொழிலாளர் சந்தையில் பெண்களின் வாய்ப்புகளைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்கியுள்ளார்.
  • பெண்கள் பெரும்பாலும் திருமணம், வீடு, குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றிற்கு உள்ளேயே அடக்கிவைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் இதில் மாற்றம் உண்டாவதற்கு நேரம் எடுக்கும் என்றும் கோல்டினின் ஆய்வுகள் கூறுகின்றன என நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
  • பொருளாதாரத்தில் கிளாடியா கோல்டினின் நுண்ணறிவு அமெரிக்காவுக்கும் மட்டுமின்றி, எல்லைகளைக் கடந்து பல நாடுகளைச் சென்றடைகிறது எனவும் அவரது ஆராய்ச்சி நேற்று, இன்று, நாளை என தொழிலாளர் சந்தைகளைப் பற்றிய சிறந்த புரிதலை நமக்குத் தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

யார் இந்த கிளாடியா கோல்டின்?

  • 2023ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR ECONOMICS 2023: 1946ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த கிளாடியா கோல்டின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
  • ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் விழாவில், இதில் தேர்வு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

ENGLISH

  • NOBEL PRIZE FOR ECONOMICS 2023: The Nobel Prize is awarded to people who excel in various fields around the world.
  • Namely, in memory of the Swedish scientist Alfred Nobel, the Nobel Prize is awarded annually to those who achieve achievements in 6 fields namely medicine, physics, chemistry, economics, peace and literature.
  • In that way, the Nobel Prizes for Medicine, Physics and Chemistry were announced on the following days from the 2nd. Details of the Nobel Prize for Literature and Peace were announced later. Subsequently, the Nobel Prize for Economics was awarded only on Oct. It was reported that it will be announced on the 9th.
  • Accordingly, the Nobel Prize for Economics has been announced today. Accordingly, American Professor Claudia Goldin has been notified.
  • The Royal Swedish Academy announced in a news release, 'The 2023 Alfred Nobel Sveriges Riksbank Prize in Economic Sciences has been awarded to Claudia Goldin for advancing our understanding of women's labor market outcomes.
  • Economist Claudia Goldin has provided a deeper understanding of the factors affecting women's opportunities in the labor market and how much female workers are in demand.
  • Goldin's research suggests that women are often confined to marriage, home and family responsibilities and that change will take time, the Nobel Prize committee said.
  • Claudia Goldin's insights into economics reach beyond the United States and beyond, and her research gives us a better understanding of the labor markets of yesterday, today, and tomorrow.

Who is this Claudia Goldin?

  • NOBEL PRIZE FOR ECONOMICS 2023: Claudia Goldin, born in New York in 1946, is a professor at Harvard University. She has done extensive research on women's earnings and women's role in the labor market.
  • Prizes will be awarded at a ceremony on December 10, Alfred Nobel's memorial day.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel