15th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக சுகாதார உச்சி மாநாடு 2023
- "நமது குடிமக்களின் நல்வாழ்வில் தொற்றா நோய்களின் பரவல் மற்றும் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பகால விவாதம் மற்றும் திறமையான மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான உத்தியின் அவசியத்தை இந்தியா உறுதியாக வலியுறுத்துகிறது" என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறியுள்ளார்.
- உலக சுகாதார உச்சி மாநாடு 2023 இல் "ஆரம்ப பராமரிப்பில் தொற்றா நோய்கள் குறித்த ஒருங்கிணைப்பை அதிகரிப்பது" குறித்த உயர்மட்டக் குழு விவாதத்தில் ஆற்றிய தனது மெய்நிகர் உரையின் போது இதைக் கூறினார்.
- உலக சுகாதார அமைப்பின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ எச்.ஆப்ரின் இதில் கலந்து கொண்டார். இந்த ஆண்டு உலக சுகாதார உச்சி மாநாட்டின் கருப்பொருள் "உலகளாவிய சுகாதார நடவடிக்கைக்கான ஒரு வரையறுக்கப்பட்ட ஆண்டு" என்பதாகும்.
- ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் சில்லறை விற்பனையாளர்களின் திறன்களை வலுப்படுத்த, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (எம்.எஸ்.டி.இ) கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி) கோகோ கோலா இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது. இதற்காக திறன் இந்தியா இயக்கத்தின் “சூப்பர் பவர் சில்லறை விற்பனையாளர் திட்டம்” அன்று 15-10-2023 அறிமுகம் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
- மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்த கூட்டுச் செயல்பாட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- கோகோ கோலா இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் திரு வேத் மணி திவாரி, மற்றும் திரு சங்கேத் ரே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் (பி.எம்-அபிம்), தேசிய சுகாதார இயக்கம் (என்.எச்.எம்) மற்றும் பதினைந்தாவது நிதி ஆணையத்தின் சுகாதார மானியத் திட்டங்களின் கீழ் அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதார உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அன்று (15-10-2023) அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
- அஸ்ஸாம் மாநில சுகாதார அமைச்சர் திரு கேஷப் மஹந்தா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மத்திய பெட்ரோலியம் மற்றும் தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி காணொலி மூலம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு - ஐசிசி அறிவிப்பு
- ஐசிசி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சுப்மன் கில்லும் இடம்பெற்றிருந்தார்.
- குறைந்த வயதான போதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருகிறார். மேலும் கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் அவர் பல சாதனைகளை படைத்து வருகிறார்.
- சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஷாம் 863 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 59 புள்ளிகளை எடுத்து 2வது இடத்துக்கு முன்னேறினார்.
- இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த ஆட்டக்காரர் என சுப்மன் கில் தேர்வு செய்து ஐசிசி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.