Type Here to Get Search Results !

தமிழ்நாடு பசுமை சாம்பியன்‌ விருது / TAMILNADU GREEN CHAMPION AWARD

 • தமிழ்நாடு பசுமை சாம்பியன்‌ விருது / TAMILNADU GREEN CHAMPION AWARD: தமிழக அரசின்‌, சுற்றுச்சூழல்‌ காலநிலை மாற்றம்‌ மற்றும்‌ வனத்துறை, சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு மற்றும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனி நபர்கள்‌ / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன்‌ விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ. 100000 வீதம்‌ பண முடிப்பும்‌ வழங்க உள்ளது.
 • கீழ்கண்ட தலைப்புகளில்‌ சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு மற்றும்‌ விழிப்புணர்வை சிறப்பாக தங்கள்‌ மாவட்டத்தில்‌ செயல்படுத்திய நிறுவனங்கள்‌ / கல்வி நிறுவனங்கள்‌ / குடியிருப்போர்‌ நல சங்கங்கள்‌ / தனி நபர்கள்‌ /உள்ளாட்சி அமைப்புகள்‌ / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன்‌ விருது வழங்கப்படும்‌.
 • சுற்றுச்சூழல்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி
 • சுற்றுச்சூழல்‌ விழிப்புணர்வு
 • சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு
 • பசுமை தயாரிப்புகள்‌ / பசுமை தொழில்நுட்பம்‌ தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்‌
 • நிலைத்தகு வளர்ச்சி
 • திடக்கழிவு மேலாண்மை
 • நீர்‌ மேலாண்மை மற்றும்‌ நீர்‌ நிலைகள்‌ பாதுகாப்பு
 • காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல்‌ மற்றும்‌ தணிப்பு நடவடிக்கை
 • காற்று மாசு குறைத்தல்‌
 • பிளாஸ்டிக்‌ கழிவுகளின்‌ மறுசுழற்சி மற்றும்‌ கட்டுப்பாடு நடவடிக்கை
 • சுற்றுச்சூழல்‌ மறுசீரமைப்பு மற்றும்‌ பாதுகாப்பு
 • கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை
 • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்‌, மாவட்ட ஆட்சியரின்‌ தலைமையில்‌ அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன்‌ விருது தேர்வு செய்யும்‌ குழு மூலம்‌ தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள்‌ / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும்‌ தேர்வு செய்யும்‌. 
 • இதற்கான விண்ணப்பப் படிவம்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில்‌ (https://www.tnpcb.gov.in/) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌

தமிழ்நாடு பசுமை சாம்பியன்‌ விருது 2022 / TAMILNADU GREEN CHAMPION AWARD 2022

 • தமிழ்நாடு பசுமை சாம்பியன்‌ விருது / TAMILNADU GREEN CHAMPION AWARD: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) 2022 ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்கியது.
 • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிகளுக்கு மாற்றாக ஏற்றவாறான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பங்களித்த தனிநபர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
 • சென்னையில் உள்ள நீதியரசர் பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி அல்லது SIET கல்லூரி இந்தக் என்றழைக்கப்படும் கல்லூரி இவ்விருதையும், அக்கல்லூரி முதல்வர் அப்துல் அஜீஸின் குழுவினர் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசையும் பெற்றனர்.

இதர விருது பெறுநர்கள்

 • அரசு மேல்நிலைப்பள்ளி, பழைய பெருங்களத்தூர்;
 • பேட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அடையாறு;
 • ஹேண்ட் இன் ஹேண்ட் தன்னார்வ அமைப்பு, அசோக் நகர்,
 • ஜி.தங்கராஜ், தேசியப் மற்றும் பசுமைப்படை;
 • கேட்டர்பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட், பவர் சிஸ்டம்ஸ் பிரிவு, ஓசூர்.
 • மொத்தம் 92 உறுப்பினர்கள் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் இந்த விருதையம் வென்றுள்ளனர்.

ENGLISH

 • TAMILNADU GREEN CHAMPION AWARD: Government of Tamil Nadu, Green Champion Award to 100 individuals/organizations who have fully committed themselves to environmental protection and awareness of environment, climate change and forest sector, each with a cash prize of Rs. 100000 cash payment is also provided.
 • The Green Champion Award will be given to organizations / Educational Institutions / Resident Welfare Associations / Individuals / Local Bodies / Industries who have implemented environmental protection and awareness in their district in the following topics.
 • Environmental Education and Training
 • Environmental awareness
 • Environmental protection
 • Scientific studies related to green products / green technology
 • Sustainable development
 • Solid Waste Management
 • Water management and protection of water bodies
 • Climate change adaptation and mitigation
 • Reduction of air pollution
 • Recycling and control of plastic waste
 • Environmental restoration and conservation
 • Coast Guard Operation
 • The Tamil Nadu Pollution Control Board will select 100 deserving individuals/organizations every year through a Green Champion Award selection committee headed by the District Collector. The application form can be downloaded from the Tamil Nadu Pollution Control Board website (https://www.tnpcb.gov.in/).

TAMILNADU GREEN CHAMPION AWARD 2022

 • TAMILNADU GREEN CHAMPION AWARD: Tamil Nadu Pollution Control Board (TNPCB) presented Green Champion Awards 2022.
 • The award is given to individuals, schools, colleges and businesses who have contributed to environmental protection by using sustainable alternatives to single-use plastics.
 • Justice Basheer Ahmed Sayeed College for Women or SIET College, Chennai received the award and the team of college principal Abdul Aziz received a certificate and cash prize.

Other Award Recipients

 • Government Higher Secondary School, Old Perungalathur;
 • Patrician College of Arts and Science, Adyar;
 • Hand in Hand Voluntary Organisation, Ashok Nagar,
 • G. Thangaraj, National and Green Forces;
 • Caterpillar India Private Limited, Power Systems Division, Hosur.
 • A total of 92 members have won this award with a cash prize of one lakh rupees each.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel