1st SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆகஸ்ட் 2023 மாத ஜி.எஸ்.டி. வசூல்
- கடந்த 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து, அதிகபட்சமாக, கடந்த ஏப்ரலில் ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது. அதற்கு பிறகு, ஜூலை மாதத்தில் வசூல் ரூ.1.16 கோடியாக இருந்தது.
- இந்நிலையில் இன்று வெளியான தகவலில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.59 லட்சம் கோடியாக உயந்துள்ளது. இதே போன்று 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடியாக இருந்தது.
- இந்தாண்டு 2023 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.59 கோடியாக உயர்ந்துள்ளதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீத வருவாய் வளர்ச்சி கண்டுள்ளதாக வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
- பொருளாதார செயல்பாடுகள் , ஜி.எஸ்.டி., கவுன்சிலின் நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக, ஜி.எஸ்.டி., வசூல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
- 25 வயதிலேயே தடகள ஜாம்பவான் அந்தஸ்தை நீரஜ் சோப்ரா பெற்றதாக ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் தொடங்கியது.
- இதில் நீரஜ் சோப்ரா பங்கேற்றுள்ளார். இந்த தடகள போட்டியின் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 85.71 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டியை எறிந்தார்.
- ஆனால் இவரை விட உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற செக் குடியரசு நாட்டின் வாட்லெஜ், 85.86 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார்.
- இறுதி வாய்ப்பிலும் நீரஜ் சோப்ரா சொதப்ப, 2ம் இடத்திலேயே முடித்தார். நடப்பாண்டில் இந்தியாவின் தங்கமகன் முதல்முறையாக தங்கத்தை தவறவிட்டுள்ள தொடர் இதுதான்.
- மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா இன்று 'சர்வதேச விண்வெளி மாநாடு: உள்ளடக்கிய உலகளாவிய மதிப்பு சங்கிலிகளை நோக்கி நகர்தல்' என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 2023 செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
- சர்வதேச விண்வெளி மாநாடு என்பது ஜி 20 மற்றும் பி 20 முன்னுரிமையின் கீழ் விண்வெளித் துறையில் ஒரு ஜி 20 முன்முயற்சியாகும், இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான உள்ளடக்கிய உலகளாவிய மதிப்பு சங்கிலிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் ஜி 20 நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
- இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் பயன்பாட்டுக் கழகமும், நாட்டின் இரண்டாவது பெரிய தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒன்றிணைந்து செயல்பட கைகோர்த்துள்ளன.
- தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) ஆயில் இந்தியா ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், அதன் கூறுகள் மற்றும் புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவது உள்ளிட்ட கரியமிலவாயு நீக்கத்தின் முன்முயற்சிகளில் ஒத்துழைப்பை ஆராய்வதற்காக ஆகஸ்ட் 31, 2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில், அனல் மின் கழகத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான திரு குர்தீப் சிங் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்ம இயக்குநர் டாக்டர் ரஞ்சித் ராத் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கரியமிலவாயு செறிவூட்டல், கரியமிலவாயு நீக்கத்தின் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள உதவும்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தங்கள் ஈடுபாட்டை அதிகரிக்கவும், 2070 ஆம் ஆண்டிற்குள் கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைவதற்கான நாட்டின் இலக்கிற்கு நிலையான தீர்வுகளில் ஈடுபடவும் இந்த இரண்டு மகாரத்னா நிறுவனங்களும் உத்தேசித்துள்ளன. 2032-ஆம் ஆண்டிற்குள் 60 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய என்.டி.பி.சி உறுதிபூண்டுள்ளது.
- மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர் இந்தப் போர்க் கப்பலை நாட்டுக்கு அறிமுகம் செய்தார்.
- கடற்படைக்காக `புராஜக்ட் 17 ஆல்ஃபா' (பி17ஏ) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 7-வது போர்க் கப்பல் மகேந்திரகிரியாகும். எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், அதிநவீன ஆயுதங்கள், தொலையுணர்வு சாதனங்களுடன் கூடிய இந்தப் போர்க் கப்பல், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி வல்லமையின் அடையாளமாக திகழும்.
- நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி விவரங்களை தேதிய புள்ளியல் அலுவலகம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
- அதன்படி, முதலாம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் 2023 ஆண்டின் முடிவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.