12th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழகத்தில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு தமிழக அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- தரமான கண் சிகிச்சையை எளிதாகவும், குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளை அமைத்துள்ள பெரிய வலையமைப்பு கொண்ட குழுமமாகும்.
- இக்குழுமம், தமிழகத்தில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிசிக்சை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் உள்ளனர். இந்த நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் சமீபத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
- கொலிஜியம் பரிந்துரையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த பரிந்துரையை செய்துள்ளது.
- கொலிஜியம் பரிந்துரைத்த பட்டியலை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இந்த நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.
- இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிகள் 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
- 11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ரூ.2,900 கோடிக்கு மேல் மதிப்புள்ள எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ) 90 உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- செப்டம்பர் 12, 2023 அன்று ஜம்முவில் நடந்த ஒரு நிகழ்வில் இந்த திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நெச்சிபு சுரங்கப்பாதை, மேற்கு வங்கத்தில் இரண்டு விமான நிலையங்கள்; இரண்டு ஹெலிபேடுகள்; 22 சாலைகள் மற்றும் 63 பாலங்கள் இதில் அடங்கும். இந்த 90 திட்டங்களில், 36 திட்டங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளன.
- லடாக்கில் 26; ஜம்மு காஷ்மீரில் 11; மிசோரமில் 5; இமாச்சலப் பிரதேசத்தில் 3; சிக்கிம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு மற்றும் நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் தலா ஒன்று ஆகியவை இடம் பெற்றுள்ளன.