69-வது தேசிய திரைப்பட விருதுகள் / 69th NATIONAL FILM AWARDS
TNPSCSHOUTERSAugust 25, 2023
0
69-வது தேசிய திரைப்பட விருதுகள் / 69th NATIONAL FILM AWARDS: இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரத்தை அறிவித்தார்.
திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரம்
69-வது தேசிய திரைப்பட விருதுகள் / 69th NATIONAL FILM AWARDS: சிறந்த நடிகைக்கான விருதை முறையே 'கங்குபாய் கத்தியவாடி' மற்றும் 'மிமி' படத்திற்காக ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டனர்.
'புஷ்பா: தி ரைஸ்' படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
பி.லெனின் இயக்கிய 'சிற்பிகளின் சிற்பங்கள்' சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'கொமுரம் பீமுடோ' பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை கால பைரவா வென்றார் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை காஷ்மீர் பைல்ஸ் வென்றுள்ளது.
'ஷெர்ஷா' திரைப்படம் சிறப்பு ஜூரி விருதை வென்றது.
மணிகண்டன் இயக்கிய 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த தமிழ்படமாக 'கடைசி விவசாயி' (மணிகண்டன்) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
கருவறை ஆவணப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
சர்தார் உதம் சிறந்த இந்தி படமாகவும், செலோ ஷோ சிறந்த குஜராத்தி படமாகவும், 777 சார்லி சிறந்த கன்னட படமாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.
சிறந்த பிண்ணனி பாடகிக்கான பிரிவில் 'இரவின் நிழல்' திரைப்படத்தில் "மாயவா தூயவா" பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
ENGLISH
69th NATIONAL FILM AWARDS: National Film Awards are given annually by the central government to films released in Indian languages. These awards are given to recognize celebrities from different language based film industry including Tamil, Telugu, Malayalam and Hindi.
Accordingly, the 69th National Film Awards were announced yesterday. Union Minister Anurag Tagore announced the winners of the National Film Awards.
The details of the film award winners
69th NATIONAL FILM AWARDS: Alia Bhatt and Keerthy Sanon shared the Best Actress award for 'Gangubhai Kathiyavadi' and 'Mimi' respectively. Allu Arjun won the best actor award for 'Pushpa: The Rise'.
'Sculptures of Sculptors' directed by B.Lenin was selected as the best educational film. Pallavi Joshi for 'Kashmir Piles' has been announced with the National Award for Best Supporting Actress.
Kala Bhairava won the award for Best Playback Singer for the song 'Komuram Peemuto' from 'RRR' and Nargis Dutt won the award for Best Film on National Integration in Kashmir Piles.
'Shersha' won the Special Jury Award.
The late actor Nallandi, who acted in Manikandan's 'Kaaisi Vivasayi', has been announced with a National Award.
'The Last Farmer' (Manikandan) has been selected as the best Tamil film. Directed by Manikandan and produced by Vijay Sethupathi, the film 'Kaaisi Vivasayi' has been awarded the National Award for Best Film. Also, it has been selected as the best Tamil movie of 2021.
National award has been announced for late actor Nallandi who acted in the film 'Kaidisi Kiyar'.
Srikanth Deva has been announced as the best music composer for the documentary film Karurai.
Sardaar Udham has been selected as the Best Hindi Film, Cello Show as the Best Gujarati Film and 777 Charlie as the Best Kannada Film.
Shreya Ghoshal has been announced the National Award for Best Pinnani Singer for her song "Mayava Thuyava" in the movie 'Shadow of the Night'.