3rd AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஸ்டடி இன் இந்தியா இணையதளம் தொடக்கம்
- இந்தியாவில் சர்வதேச மாணவர்கள் கல்வி பயில்வதை எளிதாக்கும் விதமாக 'ஸ்டடி இன் இந்தியா' என்ற இணையதளத்தை ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இளநிலை, முதுகலை, முனைவர் பட்ட படிப்புகள், யோகா, ஆயுர்வேதம் மற்றும் கவின்கலைகள் உள்ளிட்ட துறைகள் பற்றிய தகவல்களை, திட்டங்களை உள்ளடக்கி உள்ளது.
- தியோதர் டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் பைனல் புதுச்சேரி கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் மண்டலம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்தது. குன்னும்மல் 107, கேப்டன் மயாங்க் 63, ஜெகதீசன் 54, ரோகித் ராயுடு 26, சாய் கிஷோர் 24*, சுதர்சன் 19 ரன் விளாசினர்.
- அடுத்து களமிறங்கிய கிழக்கு மண்டலம் 46.1 ஓவரில் 283 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. சுதிப் குமார் 41, கேப்டன் சவுரவ் திவாரி 28, ரியான் பராக் 95, குஷாக்ரா 68 ரன் விளாசினர்.
- தென் மண்டல பந்துவீச்சில் வாஷிங்டன் 3, கவெரப்பா, விஷாக், கவுஷிக் தலா 2, சாய் கிஷோர் 1 விக்கெட் வீழ்த்தினர். 45 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் மண்டலம் தியோதர் டிராபியை முத்தமிட்டது.
- மக்களவையில் டெல்லி சட்டத் திருத்த மசோதாவை உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் புதன் கிழமை தாக்கல் செய்தார். சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- மேலும், ஆம் ஆத்மி எம்பி சுசில் குமார் ரிக்குவை மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
- அவையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றஞ்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.