30th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
- கர்நாடக தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம்ரூ.2,000, பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, மாதம் 10 கிலோ இலவசஅரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் இலவசம், பேருந்தில் மகளிருக்கு இலவசப் பயணம் ஆகிய 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.
- இதன்படி, பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, மாதம் 10 கிலோ இலவச அரிசி, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டன.
- இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆனதைக் குறிக்கும் வகையில் மைசூரு நகரில் நேற்று விழா நடைபெற்றது.
- இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- அப்போது மல்லிகார்ஜுன கார்கே குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்கி, குடும்ப லட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரும் ரூ.2,000 வழங்கினர்.
- மூத்த இந்திய தகவல் சேவை அதிகாரி மணீஷ் தேசாய், பத்திரிகை தகவல் பணியகத்தின்(பிஐபி) முதன்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- 1989ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர் அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளராகவும் இருப்பார். ஓய்வுபெறும் தற்போதைய முதன்மை இயக்குநர் ஜெனரல் ராஜேஷ் மல்ஹோத்ராவிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொண்டு நாளை பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது, மணீஷ் தேசாய் மத்திய தகவல் தொடர்புப் பணியகத்தின் தலைமை இயக்குநராக உள்ளார். இதே போல் மூத்த ஐஐஎஸ் அதிகாரி பூபேந்திர கைந்தோலாவை செய்தித்தாள்களின் பதிவாளர் (ஆர்என்ஐ) பத்திரிகை பதிவாளராக ஒன்றிய அரசு நியமித்து உள்ளது.
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும், தேசிய தூய்மைத் தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகமும் 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- இந்த உத்தி சார்ந்த கூட்டாண்மை நாடு முழுவதும் உள்ள இந்த விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் தூய்மைத் தொழிலாளர்கள், மனிதக்கழிவை கையால் அகற்றுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- குறிப்பிட்ட இலக்கான நலத்திட்டங்களுக்கு நிதியை திறம்பட ஒதுக்கீடு செய்வதன் மூலமும் பயன்படுத்துவதன் மூலமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகிறது.
- பாதுகாப்பு, கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் நிலையான வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் முன்முயற்சிகளை அதிகரிக்க இந்த கூட்டாண்மை முயற்சிக்கிறது.
- நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க மோசமான காலநிலையை எதிர்கொண்டு கடினமாக உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறது.