3rd JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிங்கப்பூரில் முதாவது ஹைட்டரஜன் எரிபொருள் கொண்ட வாகனத்தின் சோதனை ஓட்டம்
- ஒரு சிறு லாரி போன்ற வாகனத்தில் 'ஸ்பெக்ட்ரோனிக்' நிறுவனத்தின் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் பொருத்தப்பட்டிருக்கும்.
- இந்த லாரியில், ஒரு ட்ட வரையிலான எடையும் கொண்டு செல்லலால்ம. மேலும் 500 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும் திறன் பெற்றது. அது அதிவேகமாக மணிக்கு 44 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. ஐந்து நிமிடங்களில் அதில் எரிபொருள் நிரப்பப் முடியும்.
- ஹைட்ரஜன் எரிபொருளின் மின்கலன், காற்றழுத்தப்பட்ட கலனுக்குள் உள்ள ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டும் காற்றில் உள்ள ஆக்ஸிடன் கொண்டும் ரசாயன முறைப்படி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
- ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் தொடர்பில் நடத்தப்படும் இரண்டாவது மிகப் பெரிய சோதனை இதுவாகும். மெர்சிடிஸ் பென்ஸ் A-வகை சிறிய கார்களில் எரிபொருள் மின்கல மின்சாரம் பொருத்தப்பட்டிருந்தபோது அது சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
- அவை கோஸ்ட் ரோட்டில் உள்ள பிபி (BP) பெட்ரோல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் சாவடியில் எரிபொருளை நிரப்பின. அத்தொழில்நுட்பத்தில் செலவுகள் சற்று அதிகமாக இருந்ததால் அது கைவிடப்பட்டது.
- இருப்பினும், இந்தத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பல்வேறு வளர்ந்த நாடுகள், தூய்மை எரிசக்தித் திட்டமாக தங்கள் நாடுகளில் அவற்றை மேற்கொண்டுள்ளன.
- ஹியுண்டே, பிஎம்டபுள்யூ, டோயோட்டா முதலிய நிறுவனங்கள் தங்கள் சிறிய வாகனங்களுக்கு எரிபொருள் மின்கல மின்சாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உச்ச நீதிமன்றத்துக்கு, மே 22ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை காலத்தில், 2,000க்கும் மேற்பட்ட வழக்குகளை கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வுகள் விசாரித்தன.
- அப்போது, 700 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இந்த விடுமுறை காலத்தில் மூன்று நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 42 நாட்களுக்குப் பின் உச்ச நீதிமன்றம் நேற்று முதல் வழக்கம் போல் மீண்டும் செயல்படத் துவங்கியது.
- இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து அறைகளுக்கு வை - பை வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்து வரையிலான நீதிமன்ற அறைகளில் வை - பை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி இந்த நீதிமன்ற அறைகளில் சட்ட புத்தகங்கள், ஆவணங்கள் இருக்காது.
- மின்னணு நடவடிக்கை வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வசதியை, உச்ச நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், வளாகத்துக்கு வருகை தருபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.