6th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வழக்கறிஞர்களுக்கு பயிற்சி: இந்தியா, பிரிட்டன் ஒப்பந்தம்
- இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள வழக்கறிஞர்கள் பரஸ்பரம் மற்ற நாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
- இதில், இந்திய பார் கவுன்சில், பிரிட்டன் மற்றும் வேல்ஸ் பார் கவுன்சில், பிரிட்டன் மற்றும் வேல்ஸ் சட்ட சொசைட்டி கையெழுத்திட்டுள்ளன.
- இதன்படி, பிரிட்டனில், சர்வதேச சட்டம் தொடர்பான பயிற்சியுடன், சட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து நம் நாட்டைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் நேரடி பயிற்சி மேற்கொள்ள முடியும்.
- அதே நேரத்தில், நம் வழக்கறிஞர்கள் அங்குள்ள நீதிமன்றங்களில் வாதிட முடியாது. அதுபோல, பிரிட்டன் வழக்கறிஞர்களும் இங்கு பயிற்சி மட்டுமே எடுத்து கொள்ள முடியும்.
- எம்எச்-60 'ரோமியோ' மல்டி- மிஷன் ஹெலிகாப்டர் ஐஎன்எஸ் விக்த் போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுக்குப் பிறகு மற்றொரு தனித்துவமான சாதனையை இந்திய கடற்படை நிகழ்த்தி காட்டியுள்ளது.
- முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட 'டார்பிடோ' எனும் நீருக்கடியில் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் நீர்மூழ்கி குண்டு சோதனை செவ்வாயன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
- நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அந்த குண்டு துல்லியமாக தாக்கி அழித்தது. இது, இந்திய கடற்படை மற்றும் டிஆர்டிஓவின் (பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம்) குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை நிகழ்வாகும்.
- தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதன் முறையாக, மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.
- சிறப்பு விமானம் வாயிலாக, கடந்த 4ம் தேதி, சுரினாம் தலைநகர் பராமரிபோவுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டு அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி வரவேற்றார்.
- இந்நிலையில், பராமரிபோவில் உள்ள அதிபர் மாளிகையில், நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, சுரினாம் நாட்டின், 'கிராண்டு ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்' என்ற உயரிய விருதை, அந்நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி வழங்கி கவுரவித்தார்.
- இந்த விருதை, சுரினாமில் வசிக்கும் இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். விருது பெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- யுனஸ்கோ எனும் ஐக்கியநாடுகள் சபையில் கல்வி, கலாசார அமைப்பின் சார்பில் 2004 முதல், 'மைக்கேல் பட்டீஸ்' என்ற பெயரில், ஆண்டுதோறும் சிறந்த உயிர்கோள காப்பக மேலாண்மைக்கான விருது வழங்கப்படுகிறது.
- நடப்பு ஆண்டுக்கான விருது, ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக காப்பாளர் பகான் ஜெக்தீஸ் சுதாகருக்கு வழங்கப்படுகிறது.
- வரும் 14ல் பாரீஸ் நகரில் நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்தியாவிற்கு முதன் முறையாக இந்த விருது கிடைத்துள்ளது. இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- உலக வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சா்வதேச பொருளாதார வாய்ப்பு நிலை குறித்த அறிக்கையில் சா்வதேச பொருளாதார வளா்ச்சி 2022-இல் 3.1 சதவீதமாக இருந்தது, 2023-ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக சரிய வாய்ப்புள்ளது.
- சீனாவைத் தவிா்த்து பிற வளா்ந்து வரும் பொருளாதார நாடுகள் மற்றும் சந்தைகளைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்தது நிகழாண்டில் 2.9 சதவீதமாக சரிய வாய்ப்புள்ளது.
- இந்தியாவைப் பொருத்தவரை 0.3 சதவீதம் அளவுக்கு சரிந்து 6.3 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நாடு முழுவதும் மலிவுவிலை மக்கள் மருந்தகங்களைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.
- புதுதில்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் மத்திய சுகாதாரம், உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா உடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- இதன்படி நாடு முழுவதும் உள்ள 2,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு மலிவு விலை மருந்தகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 1000 மலிவுவிலை மருந்தகங்களும், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் எஞ்சிய 1000 மலிவுவிலை மருந்தகங்களும் நாடு முழுவதும் திறக்கப்படும்.
- மத்திய அரசின் இந்த முக்கியமான முடிவு, கூட்டுறவு சங்கங்களுக்கான வருவாயை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகுக்கும்.
- இன்றைய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சக செயலாளர், ரசாயனம் மற்றும் உரத்துறையின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- தற்போது நாடு முழுவதும் 9,400க்கும் மேற்பட்ட பிரதமரின் மலிவு விலை மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1,800 வகை மருந்துகள் 285 மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
- இந்த மலிவு விலை மருந்தகங்களில் பிரபல நிறுவனங்களின் மருந்துகள், 50 முதல் 90 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவது இதன் சிறப்பம்சம்.
- இந்த மருந்தகங்களைத் தொடங்க பார்மஸி தொடர்பான பட்டய மற்றும் பட்டப்படிப்பு பெற்ற தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல் பார்மஸி தொடர்பான பட்டய மற்றும் பட்டப்படிப்பு படித்த நபர்களைக்கொண்ட தனியார் நிறுவனங்களும், மருத்துவமனைகளும், தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை நிறுவனங்களும் தகுதிபெற்றவையாகும்.
- இதற்கு குறைந்தபட்சம் 120 சதுர அடி இடவசதியை சொந்தமாக கொண்டவர்களும், வாடகைதாரர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக மகளிர் தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் சிறப்பு பிரிவில் விண்ணப்பிக்கலாம். மலிவு விலை மருந்தகங்களுக்கு ஊக்கத்தொகையாக அதிகபட்சமாக மாதந்தோறும் 15,000 வீதம் 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.