31st May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் ஹெலிகாப்டர்களை இறக்கி சாதனை
- வான்வழிராணுவ தளவாட உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்று வரும் வேளையில், கடற்படைக்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இக்கப்பலின் வாயிலாக, 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான எடையை தாங்கக் கூடிய, விமானம் தாங்கி போர்க் கப்பல்களை தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
- மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்தில், வான்வழி மற்றும் கப்பல் வழி ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன.இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும்.
- இதில், பல்வேறு போர் விமானங்களை தரை இறக்கச் செய்யும் பயிற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வாங்கி, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை துல்லியமாக தாக்கும் எம்.எச்., - 60 ஆர் ஹெலிகாப்டர், ஐ.என்.எஸ்., விக்ராந்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
- வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் 'ஹெல்பைர்' ஏவுகணைகள், துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள், எம்.கே., - 54 ரக நீர்மூழ்கிக் குண்டுகள் போன்ற ஆயுதங்கள் உள்ள இந்த ரக ஹெலிகாப்டர், இம்மாத துவக்கத்தில் முதன்முறையாக ஐ.என்.எஸ்., கோல்கட்டா கப்பலில் தரையிறங்கியது.
- கண்காணிப்பு திறன்இந்திய கடற்படையின் கண்காணிப்பு திறன்களுக்கு மேலும் பலத்தை சேர்க்கும் வகையில், இது விக்ராந்த் கப்பலிலும் தரையிறக்கப்பட்டுஉள்ளது.
- கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது, நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி முந்தைய இரண்டு காலாண்டுகளில் சரிவுக்குப் பிறகு உயர்வு அடைந்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதம் வளர்ச்சி கண்டது. நான்காவது காலாண்டு மதிப்பீடு, முந்தைய ஆண்டின் இதே கட்டத்தில் அடைந்த வளர்ச்சியைவிட 4 சதவீதம்அதிகமாக உள்ளது.
- 2022-23 நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த மதிப்பீடு முந்தைய ஆண்டின் 9.1 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
- இந்திய ரிசர்வ் வங்கி 2022-23 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியை 7 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், ஜிடிபி வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியிருந்தார்.
- வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகள் 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சமீபத்திய ஆய்வு அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கூறியுள்ளது.
- இந்தியாவில் நகரமயமாக்கல் வீட்டுகள் மற்றும் கார்களுக்கான தேவையை அதிகரிக்கும். அதே வேளையில், அரசாங்க உள்கட்டமைப்பு செலவுகள் எஃகு மற்றும் சிமெண்டிற்கான தேவையை தூண்டும் என மூடிஸ் அறிக்கை சொல்கிறது.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (யுபியு) எனப்படும் உலகளாவிய பிராந்திய அலுவலகத்தை புது தில்லியில் நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- யுபியு- உடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம், பிராந்தியத்தில் மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடும்.
- தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து, அஞ்சல் துறையில் பலதரப்பு நிறுவனங்களில் இந்தியா பங்களிக்க இந்த ஒப்புதல் உதவும்.
- யுபியு –வின் பிராந்திய அலுவலகத்திற்கு ஒரு கள திட்ட நிபுணர், பணியாளர்கள் மற்றும் அலுவலகத்தை இந்தியா வழங்கும். திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள், அஞ்சல் சேவைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல், தபால் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், மின் வணிகம் மற்றும் வர்த்தக மேம்பாடு போன்ற திட்டங்கள் யுபியு- உடன் இணைந்து இந்த அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
- இம்முயற்சி மற்ற நாடுகளுடனான இந்தியாவின் ராஜ்யரீதியிலான உறவுகளை விரிவுபடுத்தஉதவும். குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகளாவிய அஞ்சல் மன்றங்களில் இந்தியாவின் இருப்பை இது மேம்படுத்தும்.
- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி அதன் மூலமாக கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு முறைத் திட்டத்தை எளிதில் செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐ.எம்.சி) அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (31-05-2023) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- தொழில்முறையில் இத்திட்டத்தை குறித்த காலத்திலும், சீரான முறையிலும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, கூட்டுறவு அமைச்சகம், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தும்.
- குறைந்தது 10 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக தொடக்கத்தில் இத்திட்டத்திலிருந்து பெறப்படும் அனுபவங்களின் மூலமாக, நாடு தழுவிய அளவில் இத்திட்டத்தை விரிவாக செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைகு கூட்டத்தில், CITIIS 2.0 என்னும் நகரங்களைப் புதுமைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்படும் நகர முதலீடுகள் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- CITIIS 2.0 என்பது பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (ஏஎப்டி) , மறுகட்டமைப்புக்கான கடன் நிறுவனம் ( கேஎப்டபிள்யு), ஐரோப்பிய ஒன்றியம் (இயு), தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (என்ஐயுஏ) ஆகியவற்றுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த்த் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2023 முதல் 2027 வரை செயல்படுத்தப்படும்.
- நகர அளவில் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை, மாநில அளவில் பருவநிலை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள், தேசிய அளவில் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் அறிவைப் பரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சுழற்சில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் போட்டித் திட்டங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கும்.
- CITIIS 2.0க்கான நிதியில் ரூ.1760 கோடி கடன் (200 மில்லியன் யூரோ), (ஏஎப்டி, கேஎப்டபிள்யு ஆகியவை தலா 100 மில்லியன் யூரோ), ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ரூ.106 கோடி( 12 மில்லியன் யூரோ) தொழில்நுட்ப உதவி மானியம் ஆகியவை அடங்கும்.
- CITIIS 1.0 இன் அனுபவம், வெற்றிகளை மேம்படுத்துவதையும் அளவிடுவதையும் CITIIS 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. CITIIS 1.0 வின் மொத்தச் செலவு ரூ 933 கோடி (106 மில்லியன் யூரோ).
- இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் மூன்றாவது வேலைவாய்ப்பு பணிக்குழுக் கூட்டம் 2023 மே 31 முதல் ஜூன் 2 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறுகிறது. 20 ஜி-20 உறுப்பு நாடுகள், 9 நட்பு நாடுகள் மற்றும் 4 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 78 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
- வேலைவாய்ப்பு பணிக்குழுவின் இந்த சந்திப்பு, இந்திய தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பணிக்குழு 2023-ன் 3 முக்கிய நோக்கங்கள் குறித்து ஜி-20 நாடுகளுக்கு இடையே ஒருமித்தக் கருத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.
- மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளரும், வேலைவாய்ப்புப் பணிக்குழுவின் தலைவருமான திருமதி ஆர்த்தி அஹுஜாவின் தொடக்க உரையுடன் கூட்டம் தொடங்கியது.
- வேலைவாய்ப்புப் பணிக்குழு தனது பொறுப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திரமணி பாண்டே, பிரதிநிதிகளை வரவேற்றார்.
- இதனைத் தொடர்ந்து, இந்தியத் தலைமையின் கீழ் வேலைவாய்ப்புப் பணிக்குழுவின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் விரிவாக விவாதித்தனர்.
- அடுத்த மாதம் இந்தியாவின் இந்தூரில் நடைபெறவுள்ள இறுதி வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டத்திற்கு முன்னதாக, இந்த சந்திப்பிலேயே ஒருமித்தக் கருத்தை உருவாக்க இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
- ஜி-20 வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகள் குழுவானது, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளரால் வழிநடத்தப்படுவதோடு, இணைச் செயலாளர் ரூபேஷ் குமார் தாக்கூர், இயக்குநர் திரு.மகேந்திர குமார் உள்ளிட்ட குழுவினரைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து வர்த்தகத்துறையைச் சேர்ந்த 20 பேர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் 20 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இந்திய தலைமைப் பொறுப்புக்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றனர்.