17th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023
- உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வளாகம் ஒன்றில் கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
- எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரைத் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்தப் போட்டியில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் வெளியேறிய நிலையில் வெண்கலப் பதக்கத்தை ஜப்பான் அணியுடன் பகிர்ந்து கொண்டது.
- இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் எகிப்து மற்றும் மலேசிய அணிகள் மோதின. முதலில் விளையாடிய எகிப்து வீராங்கனை கென்சி அய்மன் மலேசிய வீராங்கனை சின் யிங்யிடம் 3 - 1 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார்.
- அதன் பின்னர் விளையாடிய எகிப்து வீரர் அலி அபோ, மலேசிய வீரர் டேரன் பிரகாசமுடன் அதிரடியாக விளையாடி 3 - 1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.
- அடுத்து, மூன்றாவதாக விளையாடிய எகிப்தின் முன்னணி வீராங்கனை பைரோஸ், மலேசியாவின் ஐரா அஸ்மானுடன் விளையாடி 3 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மலேசியாவை 4 - 1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, எகிப்து அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
- ஜி-20 விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் பல்வேறு விசயங்களில் பொதுவான ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. வரலாற்றில் முதன்முறையாகும்.
- ஜூன் 15-17, 2023 இல் நடந்த ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டம், "விளைவு ஆவணச் சுருக்கம்" என்ற தலைப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட விளைவு ஆவணத்தை ஏற்றுக்கொண்டது.
- தலைமையின் இந்த வரலாற்று ஒருமித்த கருத்து, விவசாயத் துறையை மையமாகக் கொண்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விவாதங்களுக்குப் பிறகு எட்டப்பட்டது.
- 16 ஜூன் 2023 அன்று, அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது. பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
- விவசாயத்துறை எதிர்கொள்ளும் சவால்களை களைவதன் மூலம் மனிதகுலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு ஜி -20 விவசாய அமைச்சர்கள் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.