இந்த பொதுத் தேர்விற்கு 8.5 லட்சம் (8,51,303) மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மொழித் தேர்வு உள்ளிட்ட பாடங்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதேபோன்று , தனித்தேர்வர்களில் 1000க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கப்பட்டுள்ளது. சரியாக 9.30 மணிக்கு
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in
ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் பலரும் இணையம் வழியாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் விதமாக 4 இணைய பக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
நூலகத்தில் ரிசல்ட்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளிகளில் ரிசல்ட்
மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
SMS வழியாக ரிசல்ட்
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.