9th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியா - இஸ்ரேல் இருநாடுகளுக்கிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- இஸ்ரேல் வௌியுறவுத்துறை அமைச்சர் எலிகோஹன் 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருக்கு ஒன்றிய வௌியுறவுத்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தொடர்ந்து ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெங்சங்கரை எலிகோஹன் சந்தித்து பேசினார். அப்போது, விவசாயம், நீர், பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் இருநாடுகளிடையே உறவை முன்னோக்கி எடுத்து செல்வது, சுகாதாரம், உயர்தொழில்நுட்பம், டிஜிட்டல் துறை உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவைகள் குறித்து இருஅமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.
- தொடர்ந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், இஸ்ரேல் வௌியுறவுத்துறை அமைச்சர் எலிகோஹன் முன்னிலையில், இருநாடுகளுக்கிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- 3 நாள் பயணமாக இந்தியா வந்த இஸ்ரேல் அமைச்சர் எலிகோஹன், இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக தனது இந்திய பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு இஸ்ரேல் திரும்பி சென்றார்.
- ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் மகத்தான சாதனை படைக்கும் அணி, வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் லாரியஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த வண்ணமயமான விழாவில், உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கான விருது அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
- தலைசிறந்த அணியாக, மெஸ்ஸி தலைமையில் உலக கோப்பையை வென்று அசத்திய அர்ஜென்டினா அணி தேர்வு செய்யப்பட்டது. ஒரே ஆண்டில் சிறந்த அணி மற்றும் சிறந்த வீரர் என 2 லாரியஸ் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற பெருமை மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (9.05.2023) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஏசியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் லிமிடெட் நிறுவனம் 1891 கோடி ரூபாய் முதலீட்டில் அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலை அமைப்பதற்கு கட்டமைக்கப்பட்ட ஊக்கச் சலுகைகள் (Structured Package of Assistance) வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இந்நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும்.
- ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சி (ஏஐஎம்இ 2023) தென்சீனக்கடல் பகுதியில் மே 8, 2023 அன்று வெற்றிகரமாக தொடங்கியது. இந்தக் கடற்படை பயிற்சியில் 9 கப்பல்களில் இருந்து சுமார் 1400 வீரர்கள் பங்கேற்றனர்.
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் தில்லி, ஐஎன்எஸ் சாத்பூரா, கடலோர ரோந்து விமானம் பி-8ஐ மற்றும் ஹெலிகாப்டர்கள், புருனே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய ஆசியான் நாடுகளைச் சேர்ந்த கடற்படை கப்பல்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது
- கோவாவில் நடைபெற்ற 3வது ஜி 20 மேம்பாட்டு பணிக்குழு கூட்டத்திற்கிடையே, வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், "ECHO" – என்னும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
- தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சி, பெண்களின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
- உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் பெண்களின் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத பங்கின் தாக்கத்தை இந்தக் கண்காட்சி பிரதிபலிக்கிறது.
- கைத்தறி மற்றும் ஜவுளிப் பொருட்கள் போன்ற பெண் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகள்; கைவினைப்பொருட்கள்; தேநீர், மசாலா பொருட்கள், ஆயுர்வேத பொருட்கள் மற்றும் தினை சார்ந்த உணவுப் பொருட்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
- பெண்களால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், நெசவு, தொழில்நுட்பத்துடன் பணிபுரிதல் போன்றவற்றின் முப்பரிமாண ஹோலோகிராம்களுடன் கூடிய அதிவேக டிஜிட்டல் அனுபவத்தை உள்ளடக்கியது இந்த நிகழ்வின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.
- இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பெண் பிரதிநிதிகள், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், ஜவுளி அமைச்சகம், தேயிலை வாரியம், மசாலா வாரியம், அம்பி உத்யோகினி பிரதிஸ்தான், பெண்கள் சுய உதவிக் குழுக்கள் போன்றவை கண்காட்சியில் பங்கேற்றன.