30th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
துருக்கி அதிபராக எர்டோகன் மீண்டும் தேர்வு
- கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வரும் தய்யீப் எர்டோகன், அந்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் என்றும் கூறப்படுகிறது.
- கடந்த மே 15ஆம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர்.
- துருக்கியின் அரசியல் வழக்கப்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மையாகக் கருதப்படும். அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், எர்டோகன் பெரும்பான்மையை இழந்தார்.
- இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் கடந்த மே 28-ஆம் தேதி நடைபெற்றது. இதில் எர்டோகன் 52% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். இதையடுத்து அவர் அந்நாட்டின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.
- சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
- இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு 128 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ராஷ்ட்ரிய இஸ்பட் நிகாம் நிறுவனம் ஆர்ஐஎன்எல் ,2022-23 ஆம் ஆண்டில் பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சிறந்த பங்களிப்பிற்காக பாதுகாப்புச் சிறப்புப் பிரிவின் கீழ் மதிப்புமிக்க வழங்கிய கிரீன்டெக் பாதுகாப்பு விருதைப் பெற்றுள்ளது.
- மதிப்புமிக்க கிரீன்டெக் பாதுகாப்பு விருது 2023 விருதை, 21வது வருடாந்திர கிரீன்டெக் விருது வழங்கும் விழாவில், அஸ்ஸாமின் முன்னாள் ஆளுநர் திரு ஜகதீஷ் முகியிடமிருந்து, ஆர்ஐஎன்எல் சார்பாக, இயக்குநர் திரு ஏ கே பாக்சி பெற்றார்.
- 21வது கிரீன்டெக் பாதுகாப்பு விருது 2023, க்ரீன்டெக் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டு, தீ, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குவதன் மூலம் வணிக எதிர்காலத்தை வரையறுக்கும் பொறுப்பை ஏற்கும் சிறந்த நிறுவனங்களை அங்கீகரித்து கௌரவிக்கிறது.