உலகில் மிகவும் துயரமான நாடுகளின் பட்டியல் 2023 / LIST OF MOST MISERABLE COUNTRIES IN THE WORLD 2023
TNPSCSHOUTERSMay 27, 2023
0
உலகில் மிகவும் துயரமான நாடுகளின் பட்டியல் 2023 / LIST OF MOST MISERABLE COUNTRIES IN THE WORLD 2023: ஒவ்வொரு ஆண்டும் உலகில் மிகவும் துயரமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 2022ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, உள்நாட்டு உற்பத்தி, வங்கி கடன் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியலில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2022ம் ஆண்டுக்கான ஆய்வில் மொத்தம் 157 நாடுகள் எடுத்து கொள்ளப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் உள்ள விபரங்கள் வருமாறு:
ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, உள்நாட்டு உற்பத்தி, வங்கி கடன் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பட்டியலில் மிகவும் துயரமான அல்லது துன்பமான நாடு என்ற பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 243.8 சதவீதத்தை பணவீக்கம் தொட்டது. இதனால் அந்த நாடு போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட உக்ரைன், சிரியா மற்றும் சூடான் உள்ளிட்டவற்றை விட மோசமான நிலையில் உள்ளது.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் வெனிசுலா, 3வது இடத்தில் சிரியா, 4வது இடத்தில் லெபனான், 5வது இடத்தில் சூடான், 6வது இடத்தில் அர்ஜென்டினா, 7வது இடத்தில் ஏமன், 8வது இடத்தில் உக்ரைன், 9வது இடத்தில் கியூபா, 10 வது இடத்தில் துருக்கி உள்ளிட்டவை உள்ளன.
மேலும் 11வது இடத்தில் நமது அண்டை நாடான இலங்கை, 12வது இடத்தில் ஹைட்டி, 13வது இடத்தில் அங்கோலா, 14வது இடத்தில் டோங்கோ, 15 வது இடத்தில் கானா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன.
இந்த பட்டியில் இந்தியா 103வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் வேலையின்மைதான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா 134வது இடத்தில் உள்ளது. இங்கும் வேலையின்மை தான் மிகவும் முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக தொடர்ந்து 6 ஆண்டுகள் முதலிடத்தில் இருக்கும் பின்லாந்து கூட துன்ப குறியீடுகள் அடிப்படையிலான கணக்கீட்டில் பின்தங்கி உள்ளது. இந்த நாடு 109வது இடத்தில் உள்ளது.
அதேநேரத்தில் இந்த பட்டியலில் கடைசி பத்து இடங்களில் சிறிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதாவது 148 வது இடத்தில் மால்டா, 149வது இடத்தில் டோகோ, 150வது இடத்தில் தாய்லாந்து, 151வது இடத்தில் நைகர், 152வது இடத்தில் தைவான், 153வது இடத்தில் மலேசியா, 154வது இடத்தில் ஜப்பான், 155வது இடத்தில் அயர்லாந்து, 156வது இடத்தில் குவைத், 157 வது இடத்தில் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ன. இந்த 10 நாடுகளிலும் இந்தியா, அமெரிக்காவை விட வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறைந்த சதவீதத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
LIST OF MOST MISERABLE COUNTRIES IN THE WORLD 2023: Every year a list of the most miserable countries in the world is published. Accordingly, the list for the year 2022 has been published. Countries are ranked in this list based on factors such as inflation, unemployment, domestic production, bank credit prevailing in each country.
In the study for the year 2022, a total of 157 countries were taken and the study was carried out. Economist Steve Hanke published the results of this study. The details in that list are as follows:
The study was done on the basis of factors such as inflation, unemployment, domestic production, bank credit prevailing in each country. Zimbabwe tops the list as the most miserable or miserable country. Inflation touched 243.8 percent last year. This puts the country in a worse position than war-torn Ukraine, Syria and Sudan.
The list includes Venezuela at 2nd place, Syria at 3rd place, Lebanon at 4th place, Sudan at 5th place, Argentina at 6th place, Yemen at 7th place, Ukraine at 8th place, Cuba at 9th place, and Turkey at 10th place. Also in 11th place is our neighbor Sri Lanka, 12th place is Haiti, 13th place is Angola, 14th place is Tonga, 15th place is Ghana.
India ranks 103rd in this bar. Unemployment is a major problem in India. The US ranks 134th on the list. It is pointed out that unemployment is the most important problem here as well. And even Finland, the happiest country in the world for 6 years in a row, lags behind in calculations based on misery indices. The country is ranked 109th.
At the same time, the last ten places in this list are made up of small countries. That is, Malta is at 148th place, Togo at 149th place, Thailand at 150th place, Niger at 151st place, Taiwan at 152nd place, Malaysia at 153rd place, Japan at 154th place, Ireland at 155th place, Kuwait at 156th place, and Switzerland at 157th place. It is noteworthy that in these 10 countries unemployment and inflation percentages are lower than India and USA.