19th May 2023 TAMIL TNPSC CURRENT PDF TNPSC SHOUTERS
உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
- உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளுக்கானப் பணியிடங்கள் உள்ளன. இதில் 2 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில் பிரஷாந்த் குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் புதிய நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
- இவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்றம் அதன் முழு பலத்தை எட்டியுள்ளது.
- கடந்த 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரியக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.
- அதற்கு மாற்றாக, பொருளாதாரத்தில் கரன்சிகளுக்கான தேவையை நிறைவுசெய்யும் வகையில் புதிதாக முதன்முதலில் ரூ.2000 நோட்டுகள் 2016 நவ.2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. ரிசர்வ் வங்கி சட்டம் 24(1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- பொருளாதாரத்தில் இதர மதிப்புகளில் கரன்சி நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே ரூ.2000 நோட்டுகள் அப்போது வெளியிடப்பட்டன.
- இந்த நிலையில், கடந்த 2018-19-ம் ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது புழக்கத்தில் உள்ள 89 சதவீத ரூ.2000 நோட்டுகள் கடந்த 2017 மார்ச் மாதத்துக்கு முன்பாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டவை ஆகும்.
- எனவே, பொதுவெளியில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் என்பது தற்போதைய நிலையில் பெருமளவு குறைந்துவிட்டது.
- இந்த நிலையில், கரன்சி புழக்கத்தின் தேவையை நிறைவு செய்ய இதர மதிப்புடைய கரன்சி நோட்டுகளே போதும் என்பதால் ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி தற்போது வந்துள்ளது. 'கிளீன் நோட் பாலிசி' என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், சட்டப்பூர்வ அடிப்படையில் அந்தநோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்.
- பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகளில் இதர மதிப்புடைய கரன்சிகளாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்கவும், வழக்கமான பணிகளைஅவர்கள் மேற்கொள்ள வசதியாகவும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, வங்கிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலானநோட்டுகளை மட்டுமே தனிநபர் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் இருக்கக்கூடிய 4 நீதிபதிகளை நியமிக்கக்கோரி கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் அமைப்பானது பரிந்துரை செய்திருந்தது.
- ஆனால் கொலீஜியத்தின் இந்த பரிந்துரை மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. அண்மையில் மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூவிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு, அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ஒதுக்கப்பட்டது.
- இதனையடுத்து கடந்த சில தினங்களாக கிடப்பில் உள்ள கொலிஜியம் அமைப்பின் பரிந்துரைகளை மத்திய சட்டத்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வருகிறது. இதனையடுத்து நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பல்வேறு நீதிபதிகள் நியமனத்திற்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.
- அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகளை நியமிக்க தற்பொழுது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஏற்கனவே இருக்கும் நீதிபதிகளுடன் கூடுதலாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்திருக்கிறது. அதன்படி மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள ஆர். சக்திவேல், பி.தனபால், சி. குமரப்பன், கே. ராஜசேகர் ஆகிய 4 நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாஜ நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இந்திய மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களின் கூட்டு முயற்சியின் விளைவாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் `இந்தியா-இஸ்ரேல் நீர் தொழில்நுட்ப மையம்' (CoWT) அமைக்கப்படவுள்ளது.
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் இந்தப் புதிய வசதியை நிறுவுவதற்கு இஸ்ரேலின் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்புக்கான ஏஜென்சியான MASHAV உடன் இணைந்து செயல்படவுள்ளது.
- இந்த மையத்தின் முக்கிய நோக்கம், இந்தியத் தேவைகளுக்காக இஸ்ரேலின் சிறந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதை உறுதி செய்வதும், இந்திய நீர்த் துறைக்கான நிலையான மேலாண்மை தீர்வுகளில் பணியாற்றுவதும் ஆகும்.
- இந்த மாத தொடக்கத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏலி கோஹன் ஆகியோர் முன்னிலையில், இது தொடர்பான விருப்பக் கடிதத்தில் இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MoHUA) செயலர் மனோஜ் ஜோஷி, ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோட்டி மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- நட்பு ரீதியிலான தொழில் கொள்கைகளால், முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா மாறியிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
- புதுதில்லியில் ஆசிய பெட்ரோ- ரசாயன தொழிற்சாலை மாநாடு 2023க்கு இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்.
- நீடித்த எதிர்காலத்தைத் தூண்டுதல் என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட இந்த மாநாட்டில், சீனா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பியா மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
- அசாமின் குவாஹத்தியில், இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் ஆணையம், சாகர் மாலா மேம்பாட்டுக்கழகம், அசாம் சுற்றுலா மேம்பாட்டுக்கழகம், அசாம் மாநில உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் போக்குவரத்துத்துறை ஆகியவற்றுக்கிடையே நதி அடிப்படையிலான சுற்றுவட்ட சமய சுற்றுலா’வுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- அசாமில் நதிநீர் சுற்றுலாத்துறையின் புதிய அத்தியாயத்தை திறப்பதற்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்த நிகழ்வில் அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ஆகியோர் பங்கேற்றனர்.
- குவாஹத்தியை சுற்றியுள்ள ஏழு வரலாற்றுச் சிறப்புமிக்க சமயத்தலங்களுக்கு இடையே விரும்பும் இடத்தில் ஏறி, விரும்பும் இடத்தில் இறங்கும் நவீன படகுச் சேவைக்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.
- காமாக்யா, பாண்டுநாத், அஸ்வத்க்லந்தா, டோல் கோவிந்தா, உமானந்தா, சக்ரேஸ்வர், ஆனியாத்தி சத்ரா ஆகியவை இந்த ஏழு இடங்களாகும்.
- இந்தத் திட்டம் 12 மாதங்களுக்குள் ரூ. 45 கோடி முதலீட்டில் பூர்த்தி செய்யப்படும். அனுமான் கட் என்ற இடத்தில் இருந்து உசன் பசார் வரையிலான இந்த சுற்றுவட்டப் படகுச்சேவை முழுவட்டத்தை இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் நிறைவு செய்யும்.
- திட்டம்-75இன் ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’, மே 18, 2023 அன்று தனது கடல்வழி ஒத்திகை பயணத்தைத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 20, 2022 அன்று மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த ஒத்திகைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, 2024-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய கடற்படையிடம் ‘வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பல் ஒப்படைக்கப்படும்.
- திட்டம்-75 இன் கீழ் 24 மாதங்களில் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்துள்ள நிலையில், ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலின் ஒத்திகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- இந்த முயற்சி தற்சார்பு இந்தியாவிற்கு ஊக்கமளிக்கும். ‘வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பல், கடலில் தீவிர ஒத்திகையில் ஈடுபட உள்ளது, குறிப்பிடத்தக்கது.