15th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஐசிசி விதிகளில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்த புதிய விதிகளின் கீழ் தான் விளையாடப்பட உள்ளது.
- பிளேயிங் கண்டிஷனில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களின் கீழ் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி முதல் போட்டியாக விளையாடப்படுகிறது. இந்தப் போட்டி ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது.
- டிவி அம்பயர்களுடன் கள நடுவர்கள் முடிவை பரிசீலிக்கும் போது 'சாஃப்ட் சிக்னல்' கொடுக்க வேண்டிய அவசியமில்லை. முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கள நடுவர்கள், டிவி அம்பயர்களுடன் கலந்து பேசலாம்.
- வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு மிக அருகே கீப்பிங் பணியை கவனிக்கும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் நிற்கும் ஃபீல்டர்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமாகும்.
- ஃப்ரீ ஹிட்டில் பந்து ஸ்டம்பைத் தாக்கினாலும் எடுக்கப்படும் ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- 2022-2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில், "செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence), இயந்திர அறிவு (Machine Learning), நம்பிக்கை இணையம் (Block chain) போன்ற வளர்ந்துவரும் தொழில்களின் முக்கியத்துவத்தை இந்த அரசு நன்கு அறிந்துள்ளது.
- இதனை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (TNT) அரசால் அமைக்கப்படும். மாநிலத்தின் பெரும் தொழில்நுட்ப சவால்களுக்குத் தீர்வு காணவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த மையம் செயல்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
- அதன்படி சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 54 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப (ITNT) மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- இம்மையம், புதுமைகளை (Innovations) ஒரு சேர அமைப்பதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க ஒரு ஊக்கியாகச் செயல்பட்டு, உலகளவில் தமிழ்நாட்டை முதல் 10 இடங்களில் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
- ஆழ்தொழில்நுட்ப (DeepTech) மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப முனைவோர்களை ஊக்குவித்து, பெரு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒருங்கிணைந்து உயர்தொழில்நுட்ப முன்மாதிரி மற்றும் வடிவமைப்பு வசதிகளை அமைத்து உலகளாவிய இணைப்புகளை இந்த மையம் உருவாக்கும்.
- இந்தியாவிலேயே முதன்முறையாக நிறுவப்பட்டுள்ள இத்தகைய தொழில்நுட்ப மையம், கல்வி நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்கள் (start-ups), பெரு நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். இம்மையத்தின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக. ஸ்டார்ட்அப் (start-up) நிறுவனங்களுடன் இணைந்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- இத்திட்டச் செலவிற்கு ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 50% நிதியினை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு 37% நிதியுதவியும், தொழில் நிறுவனங்கள் மூலம் 13% நிதி உதவியும் பெறப்பட்டுள்ளது.
- இந்த மையம், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் ஒரு லாபநோக்கமற்ற நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது.
- தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தேசியத் தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்.
- இந்தப் புதிய ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் அதிநவீன வசதிகளை உள்ளடக்கியது. இந்த ஆய்வகம் அமைந்துள்ள தாவர சுகாதார மேலாண்மை நிறுவனம், நீடித்த வேளாண்மைக்கான பயிற்சிகளையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை, உயிரி பூச்சிக்கொல்லிகள், உயிரி உரங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு விதமான பயிர்களில் ஏற்படும் நோய் மேலாண்மை, பூச்சிக்கொல்லிகள் குறித்த பயிற்சி முகாம்களை அளித்து வருகிறது.
- ஜி20 இரண்டாவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தின் பிரதிநிதிகள் நிலையான விவாதங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தொடங்கியது.
- மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த் ராய் ஆகியோர் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் இயக்கமான லைஃப் மிஷன் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளை அடையாளம் காண உதவும் வகையிலான மேரிலைஃப் (Meri LiFE) என்ற செயலியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் அறிமுகம் செய்து வைத்தார்.
- பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப்பார்வையில் இடம்பெற்ற சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையை உத்வேகப்படுத்தும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையான லைஃப் இயக்கத்தின் இணையதளத்தில் சூற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய படைப்புகள், வீடியோக்கள் உள்ளிட்டவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.