31st March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெளிநாட்டு வர்த்தக கொள்கை - 2023 வெளியீடு: ரூ.164 லட்சம் கோடிக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு
- நாட்டின் ஏற்றுமதியை 2030-ம்ஆண்டுக்குள் ரூ.164 லட்சம் கோடியாக அதிகரிக்கும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023-ஐ மத்திய அரசு வெளியிட்டது.
- கடந்த 2015 ஏப்ரல் 1-ம் தேதி 5 ஆண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை அமலுக்கு வந்தது. அதன்பிறகு பல முறை நீட்டிக்கப்பட்டது. அந்த கொள்கை நேற்றுடன் முடிவடைந்து விட்டது.
- இதனால் வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023-ஐ மத்திய வர்த்த கமற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதில் ஏற்றுமதியை 2030-ம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலராக (ரூ.164 லட்சம் கோடி) அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- வழக்கமாக அறிவிக்கப்படும் 5 ஆண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை மாதிரி இல்லாமல், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வர்த்தக கொள்கையில் முடிவு தேதி இல்லை. தேவைப்படும் போது இதுகுறித்த புதிய தகவல்கள் வெளியிடப்படும்.
- இந்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதியை 760 முதல் 770 பில்லியன் டாலர் வரை (ரூ.63 லட்சம் கோடி) அதிகரிக்க முடியும் எனத் தெரிகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டில் இதன் மதிப்பு 676 பில்லியன் டாலராக (ரூ.55 லட்சம் கோடி) இருந்தது.
- கூரியர் சேவை மூலமாக நடைபெறும் ஏற்றுமதிக்கான மதிப்பு வரம்பு சரக்கு பார்சல் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
- புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், இந்திய ரூபாய், சர்வதேச கரன்சியாக மாற்றப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்துக்கான பணத்தை உள்நாட்டு கரன்சியில் வழங்கலாம்.
- புதிதாக ஏற்படும் வர்த்தக சூழலுக்கு ஏற்றவகையில் 2023-ம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை ஆற்றல்மிக்கதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும்.
- புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், 4 புதிய சீர்மிகு ஏற்றுமதி நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள 39 சீர்மிகு ஏற்றுமதி நகரங்களுடன் ஃபரிதாபாத், மொரதாபாத், மிர்சாபூர் மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் பயன்கள் இ-வர்த்தக ஏற்றுமதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இ-வர்த்தக ஏற்றுமதி 200 முதல் 300 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.