23rd April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
- எதிரி நாட்டு ஏவுகணைகளை, நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை இந்தியா ஏற்கெனவே வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- இவைகள் தரை இலக்குகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள். அதுபோல் போர்கப்பல்களில் இருந்து எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியது.
- இந்த ஏவுகணை ஒடிசா கடற்கரையில் முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது. போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, நடுவானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த வகை ஏவுகணைகள் ஒரு சில வளர்ந்த நாடுகளின் கடற்படையில் மட்டுமே உள்ளன. தற்போது அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- துருக்கி நாட்டில் தற்போது உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஸ்டேஸ்ஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று நடைபெற்றது.
- இதில், பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஜோதி சுரேகா வெண்ணாம் என்ற வீராங்கனை தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள கொலம்பியாவின் சாரோ லோபவை 149-146 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
- அதேபோல், நேற்று நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்-ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்-சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றனர்.
- விஜயவாடாவை சேர்ந்த 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
- துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் மற்றும் சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு வளாகத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் 2023, ஏப்ரல் 24 அன்று சென்னையில் திறந்து வைப்பார்.
- சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்த மையம் சென்னை ஐஐடியில் ரூ. 77 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாக செயல்படும் இந்த நிறுவனம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கான தீர்வுகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டுத் தயாரிப்புகளை உருவாக்குகிறது.
- அனைத்துத் துறைகளிலும் துறைமுகம், கடலோர, நீர்வழிப்பாதைகள் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் தன்மையில் 2டி மற்றும் 3டி ஆய்வுகளை மேற்கொள்ள உலகத் தரத்திலான திறன்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
- இந்தியாவில் உற்பத்தி மற்றும் தற்சார்பு இந்தியா முன்முயற்சிகளை மேற்குறிப்பிட்ட துறைகளில் இந்நிறுவனம் மேம்படுத்துகிறது.