ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வணிகரீதியாக இஸ்ரோ செலுத்திய பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் பயணம் வெற்றி
- நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர, வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது.
- அந்த வகையில், சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்களை வணிகரீதியாக விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், ராக்கெட் பயணத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.
- இந்நிலையில், மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் நேற்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 19 நிமிடத்தில் 2 செயற்கைக் கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
- இதில் முதன்மை செயற்கைக் கோளான டெலியோஸ்-2 மொத்தம் 741 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான இது, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது.
- இது அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்பட உள்ளது.
- இதனுடன் ஏவப்பட்ட லூம்லைட்-4 (16 கிலோ) எனும் சிறிய செயற்கைக் கோள், சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது தொழில்நுட்ப ஆய்வு மற்றும் கடல்வழி போக்குவரத்துக்கு உதவும்.
- இதுதவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 பகுதியில் 'போயம்-2' எனும் பெயரில் 3-வது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, பிஎஸ்-4பகுதியில் இஸ்ரோ, இந்திய வான் இயற்பியல் நிறுவனம் உட்பட 4 ஆராய்ச்சி மையங்களுக்கு சொந்தமான 7 ஆய்வுக்கருவிகள் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன.
- செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, பிஎஸ்-4 பகுதியின் உதவியுடன் இந்த ஆய்வுக் கருவிகள், புவியை வலம் வந்து அடுத்த ஒரு மாதத்துக்கு ஆய்வு மேற்கொள்ளும்.
- துருக்கி நாட்டில் தற்போது உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்று வருகிறது. ஸ்டேஸ்ஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
- இதில், பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஜோதி சுரேகா வெண்ணாம் என்ற வீராங்கனை தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள கொலம்பியாவின் சாரோ லோபவை 149-146 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
- இந்திய விமானப்படையின் 44-வது படைப்பிரிவு சண்டிகரில் இந்த ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுகிறது. இந்த படைப்பிரிவின் புகழ்பெற்ற வரலாறு, நவீன கால இந்தியாவின் ராணுவ வரலாறு மற்றும் ராணுவ இராஜதந்திரத்தின் கலவையாகும்.
- தைரியம், துணிவு, வீரம், பக்தி மற்றும் தொழில்முறை ஆகியவற்றிற்கு பெயர் போன இந்திய விமானப்படை, இப்படையின் சாகசங்களால் நிரம்பியுள்ளது.
- 1961-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி தோற்றுவிக்கப்பட்ட இந்த படை, 1985-ம் ஆண்டு வரை AN-12 விமானம் கொண்டு இயக்கப்பட்டது. 1985-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்படை IL-76 விமானத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தது.
- அதே ஆண்டு ஜூன் 16-ம் தேதி இப்படை முதன்முறையாக இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு நடைபெறவிருந்த வைர விழா கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
- "வசுதைவ குடும்பகம்" என்ற தேசத்தின் நம்பிக்கைக்கு இணங்க, நாட்டின் குடிமக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தேவைப்படும் நேரங்களில் இப்படை பல்வேறு உதவிகளை வழங்கியது.
- விடாமுயற்சியின் மூலம் இலக்குகளை அடையுங்கள்’ என்ற நோக்கத்திற்கு ஏற்ப இப்படை செயல்படுகிறது. 1985-ம் ஆண்டில், இப்படைப்பிரிவுக்கு 'மைட்டி ஜெட்ஸ்' என மறுபெயரிடப்பட்டது.
- இப்படை தோற்றுவிக்கப்பட்டலிருந்து விமானப் படையின் நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட எந்தப் பணியையும் மேற்கொள்வதற்குப் இப்படை எப்போதும் தயாராக உள்ளது.