10th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக செஸ் ஆர்மகெடோன் ஆசியா ஓசியானியா போட்டியில் இந்தியாவின் குகேஷ் சாம்பியன்
- ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் குகேஷை வீழ்த்தினார்.
- இரட்டை எலிமினேஷன் போட்டி என்பதால் குகேஷுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. இதில் குகேஷ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் நோடிர்பெக் அப்துசட்டோரோவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
- இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற குகேஷுக்கு ரூ.16.05 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆசியா ஓசியானியா பிரிவில் இருந்து வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆர்மகெடோன் உலக அளவிலான இறுதிப் போட்டிக்கு குகேஷுடன், நோடிர்பெக் அப்துசட்டோரோவும் தகுதி பெற்றுள்ளார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேசிய கட்சி எனும் அங்கீகாரத்தை இழந்தன. இதேபோல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தற்போது பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம், பகுஜன் சமாஜ், என்.பி.பி. ஆகிய கட்சிகள் தேசிய கட்சிகளாக உள்ளன. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும் பெரும்பான்மையுடன் - மிகப் பெரிய வாக்குப் பங்குகளுடன் ஆட்சியில் உள்ளது.
- மேலும் மார்ச் மாதம் நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் 6.77% வாக்குகளைப் பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் அக்கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.
- கடந்த வருடம் அக்.19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 131 நாட்களுக்கு பின் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழக அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார்.
- இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
- இந்நிலையில் இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாலையில் ஒப்புதல் அளித்துள்ளார்.
- தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். ஆளுநருக்கு அறிவுறுத்தும் வகையிலும் ஆளுநர் செயல்பாடு குறித்து விவாதிக்கவும் ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டுமானால் பேரவை விதிகளில் சில விலக்குகளை (தளர்வு) கொண்டுவரவேண்டும்.
- அதன்படி பேரவை முன்னவர் துரைமுருகன் நேற்று ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதில், சட்டப் பேரவை விதி 92(7)ல் அடங்கியுள்ள 'ஆளுநரின் நடத்தை குறித்து' என்ற சொற்றொடர், விவாதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் பெயரை பயன்படுத்துவது என்ற சொற்றொடர் மற்றும் விதி 287-ல் அடங்கிய 92(7) ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்தி வைத்து அரசினர் தனித்தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார்.
- அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமானால் பேரவை உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரவேண்டும்.
- அதன்பின்னர் இந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்மானத்தை நிறைவேற்ற எண்ணிக்கை முறையை சபாநாயகர் அப்பாவு கொண்டுவந்தார். பேரவையில் மொத்தம் 146 உறுப்பினர்கள் இருந்தனர். அதில், 144 பேர் தீர்மானத்தை ஆதரித்தனர். பாஜ எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டும் எதிர்த்தனர். தீர்மானத்தின் மீது யாரும் நடுநிலை வகிக்கவில்லை.
- இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்கும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
- இதையடுத்து, இந்த தீர்மானத்தின் மீது அவை முன்னவர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சிந்தனை செல்வன் (வி.சி.க), ஜவஹீருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
- இந்திய விமானப்படை, அமெரிக்க விமானப்படை இடையேயான கோப் இந்தியா 2023 எனும் இருதரப்பு பயிற்சி அர்ஜன்சிங் (பனாகர்), கலைக்குண்டா, ஆக்ரா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் நடைபெற்றது.
- இந்தப் பயிற்சி இருநாடுகளின் விமானப் படைகளுக்கிடையே பரஸ்பர புரிதலை அதிகரிப்பதையும் தங்களின் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதையும், நோக்கமாகக் கொண்டது.
- இந்தப் பயிற்சியின் முதல் கட்டம் இன்று தொடங்கியது. இந்தப்பயிற்சியில் பார்வையாளராக ஜப்பான் வான்வழி தற்காப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.