4th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலகில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் நெடுஞ்சாலையில் 'பாகுபலி' மூங்கில் தடுப்பு
- மகாராஷ்டிர மாநிலத்தில் வாணி - வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தூரத்துக்கு மூங்கில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
- உலகில் முதல் முறையாக நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள இந்த மூங்கில் தடுப்பு குறிப்பிடத்தக்க சாதனை. இதற்கு 'பாகுபலி' என பெயரிடப்பட்டுள்ளது.
- இது தற்சார்பு இந்தியா நடவடிக்கையில் சிறப்பான செயல்பாடு. இந்த மூங்கில் தடுப்புகள் பல அரசு மையங்களிலும், தேசிய வாகன பரிசோதனை சாலை களிலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
- ரூர்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி கழகத்தில் நடந்த தீ பரிசோதனையிலும், மூங்கில் தடுப்பு முதல் தர சான்றிதழை பெற்றது. இந்த மூங்கில் தடுப்பு களை 50 முதல் 70 சதவீதம் வரை மறு சுழற்சி செய்ய முடியும்.
- ஆனால், இரும்பு தடுப்புகளை 30 முதல் 50 சதவீதம்தான் மறுசுழற்சி செய்ய முடியும். இந்த தடுப்புக்கு 'பம்புசா பால்கோ' என்ற மூங்கில் வகை பயன்படுத்தப்படுகிறது.
- இதன் மீது க்ரியோசோட் ஆயில் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட அதிக அடர்த்தியுடன் கூடிய பாலி எத்திலின் பூசப்பட்டுள்ளது. மூங்கில் துறைக்கும், இந்தியாவுக்கும் இது குறிப்பிடத்தக்க சாதனை. இரும்பு தடுப்புகளுக்கு சரியான மாற்றாக இந்த மூங்கில் தடுப்பு விளங்குகிறது.
- இதனால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லை. மேலும், இது ஊரக மற்றும் வேளாண் தொழிலுக்கு ஏற்றது.
- மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும் விதத்தில் 12 தலைப்புகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கை மத்திய அரசு நடத்தி வருகிறது.
- எட்டாவது இணைய கருத்தரங்கு 'கட்டமைப்பு மற்றும் முதலீடு: பிரதமரின் கதி சக்தி தேசிய பெருந்திட்டத்துடன் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது' என்ற தலைப்பில் நடந்தது.
- இதில் 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல்அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- தமிழக அரசின் நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான புத்தகங்கள் மற்றும் 'லோகோ'வை, முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
- திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில், 2030ம் ஆண்டுக்குள், நீடித்த வளர்ச்சி அடைய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- அதை அடையும் வகையில், அரசின் செயல்பாடுகளை விளக்க, புத்தகங்கள் மற்றும் லோகோ தயார் செய்யப்பட்டு உள்ளது.இவற்றை தலைமைச் செயலகத்தில், முதல்வர் வெளியிட்டார்.
- அத்துடன், நீடித்த வளர்ச்சி இலக்கு குறித்து மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்துவதற்கான சமூக ஊடகங்களையும், முதல்வர் துவக்கி வைத்தார்.
- மக்கள், வளம், புவிக்கோள், அமைதி, கூட்டாண்மை ஆகியவை, நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஐந்து அடிப்படை கொள்கைகள். இதை கருத்தில் வைத்து, அரசு முன்னெடுத்துள்ள முயற்சிகளை விவரிக்கும் வகையில், திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளின் பயன்களை கண்காணிக்க தேவையான தகவல்கள், புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. லோகோவில், 'எல்லோருக்கும் எல்லாமும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- நிகழ்ச்சியில், அமைச்சர் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் விக்ரம் கபூர் பங்கேற்றனர்.
- இந்தியா - அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சியின் (DTTI) கீழ் அமைக்கப்பட்ட விமானம் தாங்கி தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான (JWGACTC) கூட்டுப் பணிக்குழுவின் 6வது கூட்டம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை இந்தியாவில் நடைபெற்றது.
- இதில், ரியர் அட்மிரல் ஜேம்ஸ் டவுனி தலைமையிலான 11 அமெரிக்க பிரதிநிதிகள் டெல்லி மற்றும் கொச்சியில் உள்ள பல்வேறு பாதுகாப்பு/தொழில்துறை அமைப்புகளை பார்வையிட்டனர். கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தின் தொடக்க அமர்வு பிப்ரவரி 27-ம் தேதி புது தில்லியில் நடைபெற்றது.
- மேலும், கூட்டுப் பணிக்குழு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர். விமானம் தாங்கி தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களின் கீழ் எதிர்கால ஒத்துழைப்புக்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்டு அதற்கான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
- மேலும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க பிரதிநிதிகள் டெல்லி மற்றும் கொச்சியில் உள்ள மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடினர்.
- விமானம் தாங்கி கப்பல் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பில், மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த சந்திப்பு அமைந்தது.