26th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: சாட்விக்-ஷிராக் ஜோடி சாம்பியன்
- சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் ஸ்விஸ் ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி 21-19, 24-22 என்ற செட் கணக்கில் சீனாவின் ரென் ஜியாங் யூ, டான் கியாங் ஜோடியை வீழ்த்தியது. 54 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
- இந்த சீசனில் சாட்விக்- ஷிராக் ஷெட்டி ஜோடி பெறும் முதல் பட்டம் இதுவாகும். மேலும் உலக அளவிலான போட்டிகளில் இந்த ஜோடி வெல்லும் 5-வது சாம்பியன் பட்டமாகும் இது.
- கடந்த 2018-ல் ஹைதராபாத் ஓபன், 2019-ல்தாய்லாந்து ஓபன், கடந்த ஆண்டில் இந்தியா ஓபன், பிரெஞ்சு ஓபனில் இந்த ஜோடி பட்டம் வென்றிருந்தது.
- மேலும் 2022-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளிலும் சாட்விக், ஷிராக் ஷெட்டி ஜோடி பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
- 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
- இந்த இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீனும், வியட்நாம் வீராங்கனை நுகுயென் தி தாமும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய நிகத் ஜரீன், பல குத்துகளை வியட்நாம் வீராங்கனை முகத்தில் விட்டு புள்ளிகளை குவித்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் நிகத் ஜரீன் வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
- இதன்மூலம் உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோமுக்குப் பிறகு 2 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் ஜரீன். மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதைத் தொடர்ந்து நடைபெற்ற 75 கிலோ பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயினும், ஆஸ்திரேலிய வீராங்கனை கேயிட்லின் பார்க்கரும் மோதினர். இதில் லோவ்லினா 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கரை வீழ்த்தி தங்கத்தை வென்று அசத்தினார்.
- இதையடுத்து இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 தங்கப் பதக்கங்களை அள்ளியுள்ளனர்.
- இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான செயற்கைக்கோள்களை வடிவமைக்கிறது.
- அவை, பி.எஸ்.எல்.வி., - - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர இஸ்ரோ, வருவாய் ஈட்டும் நோக்குடன், வணிக ரீதியாக வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்துகிறது.
- அதன்படி, இஸ்ரோவின் வணிகப் பிரிவான, 'நியூ ஸ்பேஸ் இந்தியா' உடன், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனம், 72 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தப்படி, 2022 அக்., 23ல், 36 செயற்கைக் கோள்கள், வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தப்பட்டன.
- மீதமுள்ள, 36 செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 'எல்.வி.எம்.3 -- எம் 3' ராக்கெட், நேற்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
- இந்த ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 வகையை சேர்ந்தது; 643 டன் எடை; 43.5 மீட்டர் உயரம் கொண்டது. இதுவே அதிக எடை உடைய ராக்கெட்.
- பூமியில் இருந்து புறப்பட்ட 19வது நிமிடத்தில் இருந்து, ராக்கெட் திட்டமிடப்பட்ட, 455.53 கி.மீ.,ரில் உடைய புவி வட்ட பாதையில் தகவல் தொடர்புக்கான, 36 செயற்கைக் கோள்களையும், ஒரு சமயத்தில் நான்கு என்ற வீதத்தில், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.