11th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சீனாவின் புதிய பிரதமரானார் லி கியாங்
- சீனாவில் பிரதமராக பதவி வகித்து வந்தவர் லி கெகியாங். எனினும், 2013ம் ஆண்டு பதவிக்கு வந்ததும் தாராளவாத சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்ற அதிக நம்பிக்கையுடன் பார்க்கப்பட்டார். ஆனால், அவரது அதிகாரங்களை சீன அதிபர் ஜீ ஜின்பிங் கட்டுப்படுத்தியதுடன், அவரை ஓரங்கட்டவும் தொடங்கினார்.
- இந்த நிலையில், நாட்டின் பிரதமராக கடைசி முறையாக அவர் நேற்று விடை பெற்று கொண்டார். ஓய்வு பெறும் வயதுக்கு முன்னரே கடந்த அக்டோபர் மாதம் கம்யூனிஸ்டு கட்சியின் நிலை குழுவில் இருந்து விலகினார்.
- இந்த சூழலில், ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (63) அந்நாட்டின் புதிய புரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதற்கு முன் அவரை சீன அதிபர் ஜீ ஜின்பிங் பிரதமர் பதவிக்கு இன்று நியமனம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். லி கியாங், கடந்த அக்டோபரில் நிலை குழுவில் இணைந்துள்ளார்.
- பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றினார்.
- 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்குகளில் இதுவே கடைசியாகும்.
- இந்த கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர், கடந்த மூன்று ஆண்டுகளாக, பட்ஜெட்டுக்குப் பிந்தைய உரையாடல்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார். இந்த கலந்துரையாடல்களில் அனைவரும் ஆக்கப்பூர்வமாக பங்கு பெற்றதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ப
- ட்ஜெட்டை உருவாக்குவது பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அதனை செயல்படுத்துவதற்கான சிறந்த வழிகளைப் பற்றி விவாதித்ததாக அவர் குறிப்பிட்டார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கலந்துரையாடல்கள், ஒரு புதிய அத்தியாயம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
- மார்ச் 10ந்தேதி வரையிலான 2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் குறித்த தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன.
- மார்ச் 10 வரையிலான மொத்த நேரடி வரி வசூல், வசூல் ரூ. 16.68 லட்சம் கோடி இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 22.58% அதிகம்.
- இந்த வசூல் மொத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் 96.67% ஆகும். 2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இது 83.19% ஆகும்.
- மொத்த வருவாய் வசூல் அடிப்படையில் கார்ப்பரேட் வருமான வரி (சிஐடி) மற்றும் தனிநபர் வருமான வரி (பிஐடி) ஆகியவற்றின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்த வரையில், சிஐடியின் வளர்ச்சி விகிதம் 18.08% ஆகவும், பிஐடியின் (எஸ்டிடி உட்பட) வளர்ச்சி விகிதம் 27.57% ஆகவும் உள்ளது.
- பணத்தைத் திரும்பப்பெறுதலைச் சரிசெய்த பிறகு, சிஐடி வசூலில் நிகர வளர்ச்சி 13.62% ஆகவும், பிஐடி வசூலில் 20.73% (பிஐடி மட்டும்)/ 20.06% (எஸ்டிடி உட்பட பிஐடி) ஆகவும் உள்ளது.
- ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 10, 2023 வரை ரூ.2.95 லட்சம் கோடி ரீபண்ட் மூலம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வழங்கப்பட்டதை விட இது 59.44% அதிகமாகும்.